ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகளில் இடமாறுல் கலந்தாய்வுக்கு ஆன்லைன் விண்ணப்பம்.
ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகளில் ஆசிரியர் பொது இடமாறுல் கலந்தாய்வுக்கு ஆன்லைன் விண்ணப்பம்.
இந்த ஆண்டு புதிய நடைமுறை அறிமுகம்
ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பொது இடமாறுதல் கலந்தாய்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் புதிய நடைமுறை இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படுகிறது.
இதுதொடர்பாக மாவட்ட ஆதி திராவிடர் நல அதிகாரிகளுக்கு மாநில ஆதி திராவிடர் நலத்துறை இயக்குநர் சிவ.சண்முகராஜாஅனுப்பியுள்ள ஒரு சுற்றறிக்கையில்,
''நடப்பு கல்வி ஆண்டில் (2016-2017) ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல மேல்நிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள், கணினி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், தமிழாசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் ஆகியோருக்கு பொது இடமாறுதல் கலந்தாய்வு ஆன்லைனில் நடைபெற உள்ளது.
இடமாறுதலுக்கான விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவுசெய்ய வேண்டும். எனவே, மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அதிகாரிகள் தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து மேல்நிலை, உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் தனி வட்டாட்சியர்களை (ஆதி திராவிடர் நலம்) அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் பணிபுரியும் ஆசிரியர்களை ஜூலை மாதம் 12-ம் தேதிக்குள் தங்கள் அலுவலுகத்துக்கு வந்து ஆன்லைனில் பதிவுசெய்துகொள்ளுமாறு அறிவுறுத்த வேண்டும்'' என்று கூறப்பட்டுள்ளது.