01.01.2006 - 31.12.2010க்குள் பதவி உயர்வு பெற்றுள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கான பாதிப்புகள்
ஊதியக்குழு அரசாணை எண்:234ன் படி மிகக்குறைந்த ஊதிய ஏற்றம் 5200-20200 +.2800 நிர்ணயம் செய்யப்பட்டு ஊதியம் பெற்று வரும் இடைநிலை ஆசிரியர்களில் 01.01.2006 முதல் 31.12.2010க்குள் பதவி உயர்வு பெற்றுள்ள இடைநிலை ஆசிரியர்கள்
கவனிக்க வேண்டியவை.
அரசாணை எண் :23ன் படி இடைநிலை ஆசிரியர்களுக்கு 750 ரூபாய் தனி ஊதியமாக 01.01.2011 முதல் வழங்கப்படுகிறது.
01.01.2006 முதல் 31.12.2010 க்குள் பதவி உயர்வு பெற்றுள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை + தர ஊதியத்திலிருந்து பதவி உயர்வுக்கான ஊதிய நிர்ணயம் செய்யப்படும்.
01.01.2011லிருந்து பதவி உயர்வு பெறுபவர்களுக்கு அடிப்படை + தர + தனி ஊதியத்திலிருந்து பதவி உயர்வுக்கான ஊதிய நிர்ணயம் செய்யப்படும்.
ஒன்றியத்திற்கு வருடத்திற்கு சுமார் 10 பேர் பதவி உயர்வு பெற்றிருப்பார்கள்.
தமிழ்நாட்டில் உள்ளது 365 ஒன்றியங்கள்.
2006-2010 வரை உள்ள 5 ஆண்டுகளில் சுமார் 18650 பேர் பாதிக்கப்பட்டு பணியாற்றி வருகிறார்கள்.
இதன் பாதிப்பு அறிந்ததும் அறியாமலும் பணியாற்றுபவர்கள் ஒன்றிணைந்து முயற்சி செய்ய வேண்டும்.