உலகின் டாப் 10 பணக்கார நாடுகள்: இந்தியா 7வது இடம்

உலகின் டாப் 10 பணக்கார நாடுகள்: இந்தியா 7வது இடம் - கனடா, ஆஸ்திரேலியாவை முந்தியது
          டெல்லி: உலகில் 10 பணக்கார நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 7வது இடம் கிடைத்துள்ளது. இந்தியாவின் சொத்து மதிப்பு 5,600 பில்லியன்

அமெரிக்க டாலர் என கணக்கிடப்பட்டுள்ளது.

         தென் ஆப்ரிக்காவை சேர்ந்த 'நியூ வேர்ல்ட் வெல்த்' என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.



நியூ வேர்ட்ல் வெல்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் உலக அளவில் டாப் 10 பணக்கார நாடுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. மொத்த தனிநபர் சொத்துக்கள் விவரங்களின் படி இந்த மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக நியூ வேர்ல்ட் வெல்த் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
அமெரிக்கா 48,900 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் முதலிடத்திலும், சீனா, 17,400 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் இரண்டாம் இடத்திலும், ஜப்பான் 15,155 பில்லியன் டாலர்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளது.
இங்கிலாந்து 9,200 பில்லியன் டாலர்களுடன் 4வது இடத்திலும், ஜெர்மனி 9,100 பில்லியன் டாலர்களுடன் 5வது இடத்திலும் உள்ளது.
பிரான்ஸ் 6,600 பில்லியன் அமெரிக்க டாலர்களுடன் 6வது இடத்திலும், இந்தியா 5,600 பில்லியன் டாலர்களுடன் 7வது இடத்தை பிடித்துள்ளது.
கனடா 8வது இடத்தில் உள்ளது. அந்நாட்டின் சொத்து மதிப்பு 4,700 பில்லியன் அமெரிக்க டாலர் என கணக்கிடப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா 4500 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்துக்களுடன் 9வது இடத்திலும், இத்தாலி 4,400 அமெரிக்க டாலர் சொத்துக்களுடன் 10வது இடத்திலும் உள்ளது.

நபர்களின் நிகர சொத்து மதிப்பு என்ற அளவுகோலில் இது கணக்கிடப்பட்டுள்ளது. இதில் அவரது அசையும் சொத்துக்கள், ரொக்கம், பங்குகள், மற்றும் பிற வர்த்தக வருவாய்கள் அடங்கும். இதிலிருந்து கடன்கள் கழிக்கப்படுகின்றன. அரசு நிதிகளை கணக்கில் சேர்க்கவில்லை.

இந்தியா டாப் 10ல் 7வது இடத்தில் இருக்கக் காரணம் அதன் மக்கள் தொகையே என்கிறது நியூ வேர்ல்ட் வெல்த் அறிக்கை. 22 மில்லியன் மக்கள் தொகையே கொண்ட ஆஸ்திரேலியா டாப் 10ல் இடம்பெற்றிருப்பது கவனிக்கத்தக்கது.

கடந்த 5 ஆண்டுகளாக, டாலர் சொத்து வளர்ச்சியில் சீனாவே அதிவேக வளர்ச்சி பொருளாதாரமாக விளங்குகிறது என்கிறது இந்த அறிக்கை.
ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் நல்ல வளர்ச்சி பெற்றுள்ளது. ஆஸ்திரேலியா, இந்தியா, கனடா ஆகிய நாடுகள் இத்தாலியை கடந்த 12 மாதங்களில் முந்தியுள்ளது என அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

கடந்த 12 ஆண்டுகளில், இந்தியா, ஆஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகள் இத்தாலியை பின்னுக்குத் தள்ளியுள்ளன.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)