10 கோடி பெண் தொழிலாளர்களுக்கு பேறு காலத்தில் உதவும் புதிய திட்டம்.
நாடு முழுவதும், அமைப்புசாரா நிறுவனங்களில் பணியாற்றும், 10 கோடி பெண்கள் பயன்பெறும் வகையிலான புதிய திட்டத்தை அமல்படுத்த, மத்திய அரசு ஆலோசித்து வருகிற
து.அனைத்து நிறுவனங்களிலும், பெண்களுக்கு மகப்பேறு விடுமுறைக்காலத்தை, 26 வாரங்களாக உயர்த்தும் சட்டத்திருத்த மசோதா, ராஜ்யசபாவில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டது.
இதைத் தொடர்ந்து, அமைப்புசாரா நிறுவனங்களில் பணியாற்றும், 10 கோடி பெண்கள், பேறுகாலத்தில் பயன்பெறும் வகையில் புதிய திட்டத்தை அமல்படுத்த, மத்திய தொழிலாளர் துறை திட்டமிட்டுள்ளது. இ.பி.எப்.ஓ., எனப்படும், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியம், தொழிலாளர் மாநில இன்சூரன்ஸ் நிறுவனம் ஆகியவற்றின் திட்டங்களை போன்று, இப்புதிய திட்டம் இருக்கும்.
இத்திட்டத்தில், சந்தாதாரர்களாகிய பெண் தொழிலாளர்கள் மற்றும் அரசின் பங்களிப்பு சம அளவில் இருக்கும். நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச தொகையை விட கூடுதலாகவும், பெண் தொழிலாளர்கள், இத்திட்டத்தில் செலுத்தலாம். இவ்வாறு சேமிக்கப்படும் பணம், பேறு காலத்தில் பயன்படுத்த உதவியாக இருக்கும். சந்தாதாரர் கணக்கில் சேரும் பணத்துக்கு வட்டியும் கிடைக்கும். சந்தாதாரருக்கு, குறித்த காலத்தில் குழந்தை பிறக்காத பட்சத்தில், மொத்த பணத்தையும் திரும்ப பெற அனுமதிக்கப்படுவர்.