அரசு ஐ.டி.ஐ.,யில் சேரஆக.16 வரை விண்ணப்பிக்கலாம்.


          அரசு ஐ.டி.ஐ.,க்களில் சேர, ஆக.,16க்குள், ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்&' என, கிண்டி, அரசு ஐ.டி.ஐ., முதல்வர் ஹேமலதா தெரிவித்து உள்ளா
ர்.

          இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: கிண்டியில் உள்ள, அரசு ஐ.டி.ஐ.,க்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, வடசென்னை அரசு ஐ.டி.ஐ.,யில், ஆக., 29 முதல், 31ம் தேதி வரை நடக்க உள்ளது. இதில், சேர விரும்புவோர், www.skilltraining.tn.gov.in என்ற, இணைய தளத்தில், ஆக.,16ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர் சேரலாம். மேலும், விபரங்களுக்கு, 94449 02522, 98411 12566 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் அந்த செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)