தமிழகத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணியை, செப்., 1 முதல் துவக்க, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. அதன்படி செப்., 1ம் தேதி, மாநிலம் முழுவதும், வரை
வு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
சட்டசபை தேர்தல் நடைபெறாமல் உள்ள, கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் தொகுதிகளில் மட்டும், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படாது.
வரைவு பட்டியல் வெளியிடப்பட்ட தொகுதிகளில், பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், முகவரி மாற்றம் தொடர்பாக, செப்., 30 வரை, மனு அளிக்கலாம்; செப்., 10 மற்றும், 24ம் தேதி, கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டு, வாக்காளர் பட்டியல் படித்து காட்டப்படும். வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடர்பாக, செப்., 11 மற்றும், 25ம் தேதி, ஓட்டுச்சாவடி அளவில், விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படும். வரும், 2017 ஜனவரி, 1ம் தேதி, 18 வயது பூர்த்தியாகிறவர்கள், பெயர் சேர்க்க மனு கொடுக்கலாம். வாக்காளர் இறுதி பட்டியல், ஜன., 5ல் வெளியிடப்படும்.தஞ்சாவூர் மற்றும் அரவக்குறிச்சி தொகுதியில், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடர்பான அறிவிப்பு, பின் வெளியிடப்படும்.