வங்கியில் 'ஸ்காலர்ஷிப்' செப்., 1 முதல் அமல்
அனைத்து மாணவர்களுக்கும், நேரடியாக கல்வி உதவித்தொகைவழங்க, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மாநில அரசுகளும், அதை பின்பற்ற உள்ளன. அதற்காக,
அனைத்து மாணவர்களின், 'ஆதார்' எண் மற்றும் வங்கி கணக்கு எண்ணை இணைக்க, பள்ளி, கல்லுாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து விரிவான சுற்றறிக்கை, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான ஏ.ஐ.சி.டி.இ., மற்றும் பல்கலை மானியக் குழுவான யு.ஜி.சி., ஆகியவற்றால் கல்லுாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அதில், 'செப்டம்பர், 1ம் தேதி முதல், மத்திய அரசின் கல்வி உதவித் தொகையை, அந்தந்த மாணவர்களே, நேரடியாக வங்கியில் தான் பெற முடியும். எனவே, உதவித்தொகை பெறும் அனைத்து மாணவர்களின் ஆதார் எண்ணை பெற்று, அதை வங்கி கணக்கில் இணைக்க வேண்டும்' என, அறிவுறுத்தப்பட்டுள்ளது