பிளஸ் 2வுக்கு செப்டம்பர், 8ல் காலாண்டு தேர்வு


             'பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, செப்., 8 முதல், 23ம் தேதி வரை, காலாண்டு தேர்வுகள் நடக்கும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது. 


         பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, ஆண்டு இறுதி பொதுத் தேர்வை போல, காலாண்டு, அரையாண்டு தேர்வுகளை, அனைவருக்கும் பொதுவான வினாத்தாளுடன் நடத்த, பள்ளிகளுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

        செப்., 8ல், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, காலாண்டு தேர்வு துவங்குகிறது. பிளஸ் 2வுக்கு, செப்., 8 முதல், 12 வரை, மொழி பாடங்களுக்கும்; மற்ற தேர்வுகள், செப்., 14 முதல், 23 வரையிலும் நடத்தப்பட உள்ளன. பத்தாம் வகுப்புக்கு, செப்., 8 முதல், 14 வரை மொழி பாட தேர்வுகளும்; மற்ற தேர்வுகள், செப்., 15 முதல், 23 வரையிலும் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)