மகப்பேறு கால விடுமுறை 26 வாரங்களாக அதிகரிப்பு

மகப்பேறு கால விடுமுறை 26 வாரங்களாக அதிகரிப்பு: மாநிலங்களவையில் மசோதா நிறைவேறியது
        பெண் ஊழியர்களுக்கு பேறுகால விடுமுறையை 12 வாரங்களில் இருந்து 26 வாரங்களாக உயர்த்து வதற்கான பேறுகா
ல சலுகைகள் சட்டத் திருத்த மசோதா மாநிலங்கள வையில் நேற்றுநிறைவேறியது.

       மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்துடன் கலந்து ஆலோசித்து தயாரிக்கப் பட்ட இந்த மசோதாவை தொழி லாளர் நல அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா தாக்கல் செய்தார்.

           இதன் மீது நடந்த விவாதத்தில் அமைச்சர் தத்தாத்ரேயா பதில் அளிக்கும்போது, “உலகில் அதிக வாரங்கள் மகப்பேறு விடுமுறை அளிக்கும் நாடுகளில் கனடா (50 வாரம்) முதலிடத்திலும் நார்வே (44 வாரம்) இரண்டாம் இடத்திலும் உள்ளன. இந்த மசோதா சட்டமானால் இந்தியா மூன்றாவது இடத்தை பிடிக்கும். பணிக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதே இந்த மசோதாவின் நோக்கம்” என்றார்.மசோதா மீது அமைச்சர் மேனகா காந்தி பேசும்போது, “பேறுகால விடுமுறையை எனது அமைச்சகம் 8 மாதங்களாக உயர்த்த பரிந்துரை செய்திருந்தது. ஆனால் இது மிகவும் அதிகம் என தொழில் நிறுவ னங்கள் கருதியதால் 26 வாரங்க ளாக நிர்ணயிக்கப்பட்டது” என்றார்.இந்த மசோதா மீதான விவாதத்தில் 15 உறுப்பினர்கள் பங்கேற்றனர். இவர்களில் 10 பேர் பெண் உறுப்பினர்கள் என்பது சாதனை அளவாகும். விவாதத்தில் ஜெயா பச்சன், விஜிலாசத்யானந்த், அசோக் சித்தார்த் போன்ற எம்.பி.க்கள் பேசும்போது, “பெண் ஊழியர்களுக்கு பேறுகால விடு முறையை 1 ஆண்டாக அதிகரிக்க வேண்டும்” என வலியுறுத்தினர்.சில எம்.பி.க்கள், “ஆண் ஊழியர் களுக்கும் மனைவியின் பேறு காலத்தின்போது விடுமுறை அளிக்க வேண்டும். இதன் மூலம் குழந்தை வளர்க்கும் பொறுப்பை பெற்றோர் பகிர்ந்துகொள்ள முடியும்” என்றனர்.பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி. சதீஷ் சந்திரா பேசும்போது, “இரவல் தாய் (வாடகை தாய்) மூலமும், தத்து எடுப்பதன் மூலமும் குழந்தை பாக்கியம் பெறும் பெண் ஊழியர் களும் இந்த மசோ தாவில் சேர்க்கப் பட்டுள்ளனர். ஆனால் இரவல் தாய்க்கான சலு கைகள் பற்றி இந்த மசோதா எதுவும் குறிப்பிடவில்லை” என்றார். இதற்கு கனிமொழி, டெரக் ஓ பிரையன் ஆகிய உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர்.

இதுகுறித்து ஆய்வு செய்யப் படும் என்று அமைச்சர் தத்தாத்ரேயா உறுதி கூறினார். இதையடுத்து இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேறியது. இனி இந்த மசோதா மக்களவையின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும்.மசோதாவின் சிறப்பு அம்சங்கள்பெண் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய பேறு கால விடுமுறை 12 வாரங்களில் இருந்து 26 வாரங்களாக உயரு கிறது. இந்த சலுகை பிறந்து உயிருடன் இருக்கும் 2 குழந்தை களுக்கு மட்டுமே பொருந்தும். 2-க்கும் மேற்பட்டகுழந்தைகளுக்கு பேறுகால விடுமுறை 12 வாரங்களாக இருக்கும்.இரவல் தாய் மூலமும், தத்து எடுப்பதன் மூலமும் குழந்தை பாக்கியம் பெறும் பெண் ஊழியர்களுக்கு 12 வார பேறுகால விடுமுறை அளிக்கப்படும்.நிறுவனங்கள் உரிய வசதிகள் செய்துகொடுத்தால் பெண் ஊழி யர்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற லாம்.50 மற்றும் அதற்கு மேற்பட்ட பெண் ஊழியர்கள் பணியாற்றும் நிறுவனங்களில் குழந்தை காப்பகங்கள் கட்டாயம் ஆகிறது.இந்த சட்டத் திருத்தம் மூலம் அமைப்பு சார்ந்த துறைகளில்பணியாற்றும் பெண் ஊழியர்கள் பயன் பெறுவார்கள். 10 மற்றும் அதற்கு மேற்பட்ட தொழிலாளர் பணியாற்றும் அனைத்து நிறுவனங்களுக்கும் புதிய சட்டம் பொருந்தும்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

10th Std English One Mark Question Bank