தொலைநிலைக் கல்வி தேர்வு முடிவுகள்: ஆக.29-இல் வெளியீடு


          சென்னைப் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி நிறுவனம் கடந்த மே, ஜூன் மாதங்களில் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகள், பட்டயப்படிப்புகளுக்கு நடத்திய தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை (ஆக.29) வெளியிடப்பட உள்ளன.


          www.ideunom.ac.in, www.unom.ac.in என்ற பல்கலைக்கழக இணையதளங்கள் மூலம் இரவு 8 மணி முதல் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். தேர்வு மறுமதிப்பீடுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.ideunom.ac.in  என்ற இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஆகஸ்ட் 31-ஆம் தேதி முதல் செப்டம்பர் 8 -ஆம் தேதி வரை இதற்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிப்பவர்கள் தாள் ஒன்றுக்கு ரூ.1,000 கட்டணம் செலுத்த வேண்டும் என சென்னைப் பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)