அண்ணாமலை பல்கலை பேராசிரியர்கள் 300 பேர் அரசு கல்லூரிகளுக்கு மாற்றம்
அண்ணாமலை பல்கலை பேராசிரியர்கள் 300 பேர் அரசு கல்லூரிகளுக்கு மாற்றம்: உயர்கல்வித்துறை அதிரடி நடவடிக்கை
அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர்க
ள் 300 பேர் அரசு கலை அறிவியல் கல்லூரிகளுக்கு 3 வருட ஒப்பந்த அடிப்படையில் மாற்றப்பட உள்ளனர்.
தமிழகத்தில் உள்ள 87 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்படாமல் உள்ளது. புதிதாக தோற்றுவித்த கல்லூரிகள் மற்றும் புதிய பாடத்திட்டங்கள் அறிமுகம் செய்த கல்லூரிகளில் விரிவுரையாளர்கள் பற்றாக்குறை உள்ளது.
இந்நிலையில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக நியமிக்கப்பட்ட விரிவுரையாளர்கள் மற்றும் உதவி பேராசிரியர்களை தேவைப்படும் அரசு கல்லூரிகளுக்கு இடமாற்றம் செய்ய உயர்கல்வித்துறை முடிவு செய்தது.இதன்படி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய 369 விரிவிரையாளர்கள் மற்றும் உதவி பேராசிரியர்கள் அரசு கலை அறிவியல் கல்லூரிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து மேலும் 300 விரிவுரையாளர்கள் மற்றும் உதவி பேராசிரியர்களை 3 வருட ஒப்பந்த அடிப்படையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களுக்கு மாற்ற திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும்என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து கல்லூரி ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் பேராசிரியர்கள் கூறுகையில், ''அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கூடுதலாக உள்ள பேராசிரியர்களை பல்கலைக்கழகங்கள் மற்றும் உறுப்பு கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களில் நியமிக்கலாம். இதன் மூலம் அங்கு ஏற்கனவே பணியாற்றும் கரவுவ விரிவுரையாளர்களுக்கு பணியில் பாதிப்பு ஏற்படக்கூடாது. இதனை கருத்தில் கொண்டு தகுதியுள்ளவர்களை நியமிக்க உயர்கல்வித்துறை முன்வரவேண்டும்'' என்றனர்.