B.Ed பயிற்சி: ஆசிரியருக்கு கெடுபிடி
தொடக்க, நடுநிலைப் பள்ளி இடைநிலை ஆசிரியர்கள் பல்கலைகளில் தொலைதுார கல்வி மூலம் பி.எட்., படிக்கின்றனர். பி.எட்., படிக்கும்போது பள்ளியில் குறிப்பிட்ட காலம் ப
யிற்சி பெற வேண்டும். தொடக்கப் பள்ளி இடைநிலை ஆசிரியர்கள், பல்கலை அனுமதிக்கும் பள்ளிகளில் பயிற்சி பெற வேண்டும்.
அதேபோல் நடுநிலைப் பள்ளி இடைநிலை ஆசிரியர்கள், அவர்கள் பணிபுரியும் பள்ளிகளிலேயே 6 முதல் 8 ம் வகுப்புகளில் பயிற்சி பெறலாம் என, தொடக்கக் கல்வித்துறை ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. நடுநிலைப் பள்ளி இடைநிலை ஆசிரியர்கள், தாங்கள் பணிபுரியும் பள்ளிகளிலேயே பயிற்சி பெறுவதால், அவற்றை பணிக்காலமாக கருத வேண்டு மென, கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து 'இடைநிலை ஆசிரியர்கள் கண்டிப்பாக விடுப்பு எடுத்தே பி.எட்., பயிற்சி பெற வேண்டும். அரசாணையில் குறிப்பிடாததால் பயிற்சியை பணிக்காலமாககருத முடியாது,' என தொடக்கக் கல்வித்துறை இயக்குனரகம்உத்தரவிட்டுள்ளது.