BHARATHIYAR UNIVERSITY ASST PROFESSOR RECRUITMENT 2016 |


BHARATHIYAR UNIVERSITY ASST PROFESSOR RECRUITMENT 2016 |

இணையதளம் முடக்கப்பட்டதாக புகார் எதிரொலி பாரதியார் பல்கலை. உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பம் அனுப்ப கால அவகாசம் நீட்டிப்பு.

கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 68 உதவிப் பேராசிரியர் இடங்களை நிரப்பு வதற்கான அறிவிப்பு கடந்த ஜூலை 14-ம் தேதி வெளியிடப்பட்டது. 
விண்ணப்பங்களை ஆகஸ்ட் 10-ம் தேதிக்குள் அனுப்ப அறிவுறுத் தப்பட்டு இருந்தது. இந்நிலையில், தமிழ் ஆய்வா ளர் நலச் சங்க தலைவர் பெருமாள், துணைத் தலைவர் சிவக்குமார் ஆகியோர் கூறியதாவது: தமிழகத்தில் தமிழ் பாடத்தில் முனைவர் பட்டம் பெற்ற 7 ஆயிரம் பேர் வேலைவாய்ப்புக்காக காத் திருக்கின்றனர்.இந்நிலையில், இப்பல்கலை.யில் உதவிப் பேரா சிரியர் பணியிடம் நிரப்பப்படும் அறிவிப்பு வெளிப்படைத்தன்மை யுடன் இல்லை. விண்ணப்பத்தாரர் பலர் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அத்துடன், உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவுக்கு முன்னதாகவே சம்பந்தப்பட்ட பல்கலைக்கழக இணையதளப் பக்கம்மூடப்பட்டு விட்டது. எனவே, உதவிப் பேரா சிரியர் பணிக்கு விண்ணப்பிப்ப தற்கான காலக் கெடுவை நீட்டிக்க வேண்டும் என்றனர். இதுகுறித்து பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆ.கணபதி கூறும்போது, “காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பில் மாற்றுத்திறனாளி களுக்கான விவரங்கள் தெரிவிக் கப்பட்டிருப்பதில் சில மாற்றங்கள் செய்ய வேண்டியிருந்தது. இத னால், இணையப் பக்கம் நிறுத்திவைக்கப்பட்டிருக்கலாம். தவறு கள் சரி செய்த பின் இணையதளப் பக்கம் செயல்படத் தொடங்கும். உதவிப் பேராசிரியர் பணியிடங் களுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு ஆகஸ்ட் 22-ம் தேதி வரை நீட்டிக்கப்பட உள்ளது.ஏற் கெனவே விண்ணப்பித்திருப் பவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கத் தேவையில்லை” என்றார்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)