அதிகாரிகளுக்கான தமிழ் தேர்வு அறிவிப்பு


        ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கான தமிழ் மொழி தேர்வு, செப்., 19ல் துவங்கும் என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. 


        தமிழக அரசு துறையில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு, தமிழ் மொழி தெரிந்திருக்க வேண்டும் என்ற விதி உள்ளது. இதன்படி, ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., போன்ற பதவிகளில் இருப்போர், வெளி மாநிலத்தவர் என்றாலும், அவர்களும் தமிழ் மொழி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். 

இதன்படி, அவர்களுக்கான தமிழ் மொழி திறன் தேர்வு, செப்டம்பர், 19 முதல் அக்., 5 வரை நடக்க உள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அதிகாரிகள், டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)