மின் வாரிய தேர்வு 'ஹால் டிக்கெட்' வெளியீடு.


          மின் வாரியம், உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப, எழுத்து தேர்வுக்கான, 'ஹால் டிக்கெட்டை' வெளியிட்டு உள்ளது.இதுகுறித்து, மின் வாரிய செய்திக் குறிப்பு:


         இளநிலை உதவியாளர் - கணக்கு, நிர்வாகம்; தொழில்நுட்ப உதவியாளர், களப்பணி உதவியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான எழுத்து தேர்வு, இம்மாதம், 27 மற்றும், 28ம் தேதி நடக்கிறது. இந்த தேர்வுக்கு விண்ணப்பித்தோர், 'ஹால்டிக்கெட்டை'www.tangedcodirectrecruitment.inஎன்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு, 044 - 2235 8311, 2235 8312 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)