சிறுபான்மைக்கல்வி நிறுவன ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வு பொருந்தாது!
TET(update news) : சிறுபான்மைக்கல்வி நிறுவன ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வு பொருந்தாது!சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
தமிழகத்தில் உள்ள அரசு உதவி பெரும் சிறுபா
ன்மை பள்ளி ஆசிரியர்கள் தகுதி தேர்வுகள் எழுத தேவையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்பளித்துள்ளது.
சிறுபான்மை பள்ளி ஆசிரியர்கள் 300 பேர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் குலுவாலி ரமேஷ், முரளிதரன் அடங்கிய அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
கட்டாய கல்வி உரிமைச் சட்டம் சிறுபான்மை பள்ளிகளுக்கு பொருந்தாது என்பதால் அதில் பணிபுரியும் ஆசிரியர்களை தகுதி தேர்வு எழுதுமாறு கட்டாயப்படுத்தக்கூடாது என்ற மனுதாரர்களின் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.
கட்டாய உரிமைச் சட்டத்தின் கீழ் சிறுபான்மை மற்றும் அரசு உதவி பெறும் சிறுபான்மை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் தகுதி தேர்வு எழுத வேண்டும் என கடந்த 2011-ம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. 2011-ம் ஆண்டுக்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியர்களும் தகுதி தேர்வு எழுதுவது கட்டாயம் என்றும் இல்லை என்றால் அவர்களுக்கான சலுகைகள் நிறுத்தப்படும் எனவும் அரசு உத்தரவிட்டுள்ளதாக மனுதாரர்கள் மனுவில் கூறியிருந்தனர்.
தகுதி தேர்வு தேவையில்லை என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதன் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள சிறுபான்மை பள்ளிகளில் பணி புரியும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பயன்பெறுவார்கள். சிறுபான்மைக்கல்வி நிறுவன ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வு பொருந்தாது! சிறுபான்மைக்கல்வி நிறுவன ஆசிரியர்களுக்கு ஆசிரியர் கல்வித் தகுதி தேர்வு பொருந்தாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், நிறுத்தப்பட்ட ஊதியத்தை 2 மாதத்தில் வழங்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.