பள்ளி மாணவர்களுக்கு ரெயின் கோட்: ஜெயலலிதாவின் அதிரடி அறிவிப்பு.


         சென்னை:தமிழகத்தில் உள்ள மலைப்பிரதேசங்களைச் சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு ரெயின் கோட் வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா
அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று, விதி எண் 110ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா அறிவித்ததாவது,  தமிழகத்தில் உள்ள மலைப்பிரதேசங்களைச் சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு ரெயின் கோட் வழங்கப்படும்.

பள்ளிகளில் ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ரெயின் கோட், பூட்ஸ், சாக்ஸ் ஆகியவை இலவசமாக வழங்கப்படும்.மலைப் பிரதேசத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள், மழைக் காலங்களில் எவ்வித சிரமமும் இன்றி பள்ளிக்குச் சென்று வர வசதியாக ரெயின்கோட் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)