சத்துணவு அமைப்பாளர், சமையலர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர்


        மதுரை மாவட்டத்தில் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள சத்துணவு அமைப்பாளர், சமையலர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் தெரிவித்து உள்ளா
ர்.

 இதுகுறித்து புதன்கிழமை அவர் வெளியிட்டுள்ள செய்தி:
 மதுரை மாவட்டத்தில் பள்ளி சத்துணவு மையங்களில் 266 அமைப்பாளர் பணியிடங்கள், 282 சமையலர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணியிடங்கள் நேரடி நியமனம் மூலமாகப் பூர்த்தி செய்யப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்கள், அந்தந்த பகுதிகளில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் கிடைக்கும்.
 பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் பள்ளி மாற்றுச் சான்று, ஜாதிச் சான்று, விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்டவர் எனில் அதற்கான சான்று ஆகியவற்றின் நகல்கள் இணைத்து சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியம், நகராட்சி, மாநகராட்சி அலுவலகங்களில் செப்.16 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
 இதுதொடர்பான விவரங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சத்துணவுத் திட்டப் பிரிவு அலுவலகத்தில் தெரிந்து கொள்ளலாம் என்றார்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)