அரசினர் மகளிர் ஐ.டி.ஐ-யில் சேர இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.


        அரசினர் மகளிர் தொழில்பயிற்சி நிலையத்தில் சேர இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


             சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அரசினர் மகளிர் தொழிற்பயிற்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. இதில் சேர 10-ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் பிளஸ் 2 தேறிய, தவறிய மற்றும் பட்டம் பெற்ற மகளிரிடமிருந்து இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அரசினர் மகளிர் தொழில்பயிற்சி நிலையத்தில் கணினி இயக்குபவர், சுருக்கெழுத்து மற்றும் செயலக உதவியாளர் (ஆங்கிலம்), வரவேற்புக்கூட அலுவலக உதவியாளர், கட்டடப்பட வரைவாளர், கம்மியர் மின்னணுவியல், தகவல்தொடர்பு தொழில்நுட்பம் மற்றும் சாதனங்கள் பராமரிப்பு, கம்மியர் கருவிகள் ஆகிய ஓராண்டு மற்றும் இரண்டாண்டு தொழில்பிரிவுகளுக்கு 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மகளிருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. பட்டப்படிப்பு முடித்துள்ள நிலையில் கணினி மற்றும் தொழில்கல்வி தகுதிபெற விரும்பும் மகளிர் மற்றும் இல்லத்தரசிகள் இப்பயிற்சியில் சேரலாம். இப்பயிற்சியில் சேர மகளிருக்கு வயதுவரம்பு கிடையாது. பயிற்சிக் கட்டணமும் இல்லை.  இலவச பேருந்து மற்றும் ரயில் பாஸ் வழங்கப்படும்.
சீருடை, மாதாந்திர உவித்தொகை ரூ.500, மடிக்கணினி, மிதிவண்டி, பாடப்புத்தகம், வரைபடக் கருவிகள் ஆகியவை தமிழக அரசால் இலவசமாக வழங்கப்படுகிறது. விண்ணப்பங்களை இணையதளம் மூலம் www.skilltraining.tn.gov.in என்ற முகவரிக்கு நேரடியாகவோ அல்லது அரசினர் மகளிர் தொழில்பயிற்சி நிலையம் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகஸ்ட் 16-ஆம் தேதியாகும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)