ஊராட்சி தலைவர் தேர்தல் நடத்துவது எப்படி?


           தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகள், ஊரகம், நகர்ப்புறம் என, இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 


           ஊரக பகுதிகளில், மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய, நான்கு பதவிகளுக்கு நேரடி தேர்தல் நடக்கிறது; இதில், மாவட்ட கவுன்சிலர் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு மட்டும் கட்சி ரீதியாக தேர்தல் நடக்கிறது. தமிழகத்தில் மொத்தம், 12 ஆயிரத்து, 524 ஊராட்சி தலைவர் பதவிகள்; 99 ஆயிரத்து, 324 வார்டு உறுப்பினர் பதவிகள் உள்ளன. இதில், ஊராட்சி தலைவர் பதவிக்கு, இந்த முறை கட்சி ரீதியாக தேர்தல் நடத்துவதற்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது.
கட்சி ரீதியாக தேர்தல் நடந்தால், அரசியல் குறுக்கீடுகள் அதிகரிக்கும் என்பதால் பொதுமக்கள் பயந்தனர். இந்நிலையில், ஊராட்சி தலைவர் பதவிக்கு வழக்கம் போல் கட்சி சார்பற்ற தேர்தல் நடத்தப்படும் என, மாநில தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

10th Std English One Mark Question Bank