மத்திய அரசு பணியில் பல்வேறு வேலைவாய்ப்புகள்


மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப் பதாவது:


         இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஏஆர்) கீழ் இயங்கும் வேளாண் ஆய்வு நிறுவனங்களில் விஞ்ஞானி பணியிடங்களை நிரப்பு வதற்காக வேளாண் விஞ்ஞானிகள் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட் டிருக்கிறது.

           பணிக்கான கல்வித் தகுதி, வயது வரம்பு, விண்ணப்ப முறை உள்ளிட்ட விவரங்களை www.asrb.org என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.பாரத் பெட்ரோலியம் கார்ப்ப ரேஷன் நிறுவனத்தின் மும்பை சுத்திகரிப்பு ஆலையில் 40 டெக்னீஷியன் பணியிடங்களுக்கு கெமிக்கல் என்ஜினீயரிங் டிப்ளமா பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது 18 முதல் 27-க்குள் இருக்க வேண்டும். இப்பணிக்கு ஆகஸ்ட் 14-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களை www.bharatpe troleum.com என்ற இணையதள முகவரியில் அறிந்து கொள்ளலாம்.மேலும், இந்திய கடற்படையில் பல்வேறு துறைகளில் 486 டிராப்ட்ஸ்மேன் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. டிராப்ட்ஸ் மேன்ஷிப்பில் ஐடிஐ 2 ஆண்டு டிப்ளமா அல்லது சான்றிதழ் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது 18 முதல் 27-க்குள் இருக்க வேண்டும். இதுதொடர்பான விவரங்களை ஜூலை 30-ஆகஸ்ட் 5-ம் தேதியிட்ட “எம்ப்ளாய்மெண்ட் நியூஸ்” பத்திரிகையில் பார்க்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)