எம்.பி.ஏ., படிப்பிற்கான ஐ.ஐ.எம்., தேர்வு அறிவிப்பு
ஐ.ஐ.எம்., போன்ற மேலாண்மை கல்வி நிறுவனங்களில், எம்.பி.ஏ., படிப்பில் சேரும், 'கேட்' என்ற பொது நுழைவு தேர்வுக்கான, 'ஆன்லைன்' பதிவு, ஆக., 8ல் துவங்கும் என, அறிவிக்கப்ப
ட்டுள்ளது.
ஐ.ஐ.எம்., நிறுவனங்களில், எம்.பி.ஏ., படிக்க, 'கேட்' நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த ஆண்டு கேட் தேர்வை, பெங்களூரு ஐ.ஐ.எம்., நடத்துகிறது. இதற்கு, ஆகஸ்ட், 8 முதல் செப்., 22 வரை, ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். அக்., 18 முதல் டிச., 4 வரை, 'ஹால் டிக்கெட்' கிடைக்கும். டிசம்பர், 4ல், ஆன்லைனில் நத்தப்படும் இத்தேர்வு, 138 நகரங்களில் நடைபெறும்.
இந்த ஆன்லைன் தேர்வில், நான்கு கட்டங்களாக பதில் எழுத வேண்டும். ஒவ்வொரு கட்ட தேர்வுக்கும், 60 நிமிடங்கள் அளிக்கப்படும். ஒரு கட்டத்தை தாண்டினால் மட்டுமே அடுத்த கட்ட தேர்வு, ஆன்லைனில் செயல்பாட்டுக்கு வரும்.சிந்தித்து எழுதுதல், புதிய எண்ணங்களை கொண்டு வருதல், கணித ஆய்வு, சிக்கல்களுக்கு தீர்வு காணுதல் போன்ற வகைகளில் வினாக்கள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வின் முடிவுகள், ஜனவரியில் வெளியாகும் என, பெங்களூர் ஐ.ஐ.எம்., பேராசிரியரும், கேட் தேர்வு பொறுப்பாளருமான, ராஜேந்திர கே.பண்டி அறிவித்துள்ளார்.
பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்று, 50 சதவீத மதிப்பெண்ணுக்கு மேல் எடுத்தோர் மட்டுமே நுழைவுத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர். ஆங்கில வழியில் பேசுதல், பதில் அளித்தலும் தேர்வின் ஒரு வினாத்தாளாக இடம் பெற்றுள்ளது.