பள்ளி, கல்லூரிகளுக்கு 'டெங்கு' எச்சரிக்கை


          பள்ளி, கல்லுாரி மற்றும் பல்கலைகளில், டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.


           தமிழகத்தில் தென் மேற்கு பருவமழை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது; வடக்கு, கிழக்கு மாவட்டங்களில், பரவலாக மழை பெய்து வருகிறது. மழை பெய்து, தண்ணீர் ஆங்காங்கே தேங்குவதால், டெங்கு காய்ச்சலும் பரவ துவங்கியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில், அடுத்தடுத்த நடந்த இறப்புகள் மாணவ, மாணவியரை அச்சமடைய வைத்துள்ளது. சென்னையில், நிலவேம்பு குடிநீர் வழங்க, சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. அத்துடன், அனைத்து பள்ளி, கல்லுாரி மற்றும் பல்கலைகளில், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து, பள்ளி, கல்லுாரிகளுக்கு சுகாதாரத்துறை செயலர் டாக்டர் ராதாகிருஷ்ணன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

பள்ளி, கல்லுாரி, பல்கலைகளின் வளாகங்களை தினமும் சுத்தம் செய்து, குப்பைகள் இல்லாமலும், தேவையற்ற பொருட்கள் குவியாமல் பார்த்து கொள்ள வேண்டும்

டெங்கு காய்ச்சல் ஏற்படுத்தும், 'ஏடிஸ்' கொசுக்கள் நன்னீரில் உற்பத்தியாகும் என்பது குறித்து, மாணவ, மாணவியருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மாணவ, மாணவியரும் அருகில் உள்ள பகுதிகளில், விழிப்புணர்வு பிரசாரம் செய்ய வேண்டும்
விடுதிகள், சத்துணவு கூடங்கள் மற்றும் உணவு அறைகளில், நீர் தேங்காமல் சுத்தமாக பார்த்துக்கொள்ள வேண்டும். மேல்நிலை, கீழ்நிலை குடிநீர் தேக்க தொட்டிகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்

அருகில் உள்ள மருத்துவமனைகள், சுகாதார மையங்களின் விபரங்கள் அறிந்து, மாணவர்களுக்கு காய்ச்சல் போன்ற உடல்நலக்குறைவு ஏற்பட்டால், உடனே, ரத்த மாதிரி எடுத்து சோதனை செய்ய வேண்டும்
கல்வி நிறுவனங்களில், நிலவேம்பு, மலை வேம்பு மற்றும் பப்பாளி இலை கசாயம் தயாராக வைத்திருக்க வேண்டும்

குளோரின் கலக்கப்பட்ட குடிநீரையும், காய்ச்சி வடிகட்டிய குடிநீரையுமே மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)