தலைமைஆசிரியா்களுக்கான தலைமைப்பண்பு மேம்பாட்டுப்பயிற்சி தொடக்க விழா.


         புதுக்கோட்டை மாவட்ட அனைவருக்கும் இடைநிலைக்கல்வித்திட்டத்தின் கீழ்தலைமைஆசிரியா்களுக்கான தலைமைப்பண்பு மேம்பாட்டுப்பயிற்சி தொடக்க
விழா. மாவட்டமுதன்மைக்கல்வி அலுவலா் செ.சாந்தி தலைமை தாங்கி தொடங்கிவைத்தார்.

      புதுக்கோட்டை மாவட்ட அனைவருக்கும் இடைநிலைக்கல்வித்திட்டத்தின் சார்பில் தலைமைஆசிரியர்களுக்கான தலைமை மேம்பாட்டுப்பயிற்சியின் தொடக்கவிழா புதுக்கோட்டைலேணாவிளக்கு மவுண்ட்சீயோன்பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரியில்நடைபெற்றது. விழாவில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலா் செ.சாந்தி தலைமை தாங்கிபயிற்சியினை குத்துவிளக்கேற்றி  தொடங்கி வைத்து பயிற்சியின் முக்கியத்துவம்குறித்து தலைமையுரை ஆற்றினார். முதற்கட்டமாக நேற்று தொடங்கி வருகிற5ந்தேதி(வெள்ளிக்கிழமை) வரையும், இரண்டாம் கட்டமான வருகிற 16ந்தேதி தொடங்கிவருகிற 20ந்தேதி வரையும் ஆக 10 நாட்கள் இப்பயிற்சி நடைபெறும். இப்பயிற்சியில்மாவட்டத்தின் அரசு உயா்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளின்தெரிவுப்பெற்ற 30 தலைமைஆசிரியா்கள் பங்கேற்றுள்ளனா்.

சென்னை விஜயலட்சுமி,கொத்தமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை கே.ஜெயந்தி,ஒத்தைப்புளிகுடியிருப்பு அரசு உயா்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியா் லெட்சுமி,வல்லத்திராக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியா் சேகா், கனவுஆசிரியரைத்தேடி இயக்குநா் தாமரைக்கண்ணன் மற்றும் பா.முனிராமையா, புதியாசலம்,தென்கரைமுத்துப்பிள்ளை, ஆகியோர் கருத்தாளா்களாக கலந்துகொண்டுபயிற்சியளித்துவருகிறார்கள். முன்னதாக விழாவிற்கு வந்திருந்த அனைவரையும்புதுக்கோட்டை மாவட்ட அனைவருக்கும் இடைநிலைக்கல்வித்திட்ட மாவட்ட உதவித்திட்டஒருங்கிணைப்பாளா் ஜெ.ராதிகாராணிபிரசன்னா வரவேற்று பேசினார். கொத்தமங்கலம்மகளிர் மேல்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியா் ஜெயந்தி நன்றி கூறினார்.பயிற்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலா் செ.சாந்தி அவா்களின்வழிகாட்டலின்பேரில் மாவட்ட உதவித்திட்ட ஒருங்கிணைப்பாளா்ஜெ.ராதிகாராணிபிரசன்னா, கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் சி.பன்னீா்செல்வன்,க.ராஜா ஆகியோர் செய்துள்ளனா்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)