வருமான வரி கணக்கு தாக்கல்: நாளை கடைசி


2015-16ஆம் நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கு வெள்ளிக்கிழமை கடைசி நாளாகும்.

ஜூலை 29-இல் வங்கி ஊழியர்களின் ஒரு நாள் வேலைநிறுத்தம், 31-இல் வங்கி விடுமுறை ஆகிய காரணங்களால் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கான கெடு ஆகஸ்ட் 5-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

எனவே, அனைத்து வருமான வரி அலுவலகங்களிலும் வருமான வரிக் கணக்கை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 5) மாலை 5.30 வரை கணக்கை தாக்கல் செய்யலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், வன்முறைச் சூழல் நிலவுவதால், ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்தவர்கள் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கான கெடுவை ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)