கணித வினாத்தாள் சி.பி.எஸ்.இ., மாற்றம்


          சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், பிளஸ் 2 கணித வினாத்தாள் மாற்றப்பட்டுள்ளது. எளிமையான வினாக்கள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.


           மத்திய அரசின் இடைநிலைக் கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வினாத்தாள்கள், மிகவும் கடினமாக இருப்பதாக புகார்கள் வந்தன. இதுகுறித்து, கல்வியாளர்கள், மாணவர்களிடம் கருத்து கேட்கப்பட்டது; தனிக்குழுவும் அமைக்கப்பட்டது. இந்த குழு பரிந்துரைப்படி, வினாத்தாள் மாற்றப்பட்டு உள்ளது.அதன்படி வரும், 2017ல், பிளஸ் 2 கணித தேர்வுக்கான வினாத்தாள் மாதிரியை, சி.பி.எஸ்.இ., வெளியிட்டு உள்ளது. எளிமையான வினாக்கள், 20 சதவீதம்; சராசரி வினாக்கள், 60 சதவீதம் என நிர்ணயிக்கப்பட்டு, கடின வினாக்கள், 20 சதவீதம் என்ற அளவுக்கு மாற்றப்பட்டு உள்ளன.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)