அடுத்த ஆண்டு முதல் 'நீட்:' ஜனாதிபதி ஒப்புதல்
அடுத்த ஆண்டு முதல், 'நீட்' எனப்படும், மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்விக்கான பொது நுழைவுத் தேர்வு
நடத்தும் மசோதாக்களுக்கு, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்.
'மருத்துவக் கல்லுாரிகளுக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்த வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்திருந்தது. இந்த நுழைவுத் தேர்வை, இந்த ஆண்டே நடத்தவேண்டும் என்றும் சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, மே, 1 மற்றும் ஜூலை, 24ம் தேதிகளில், இரண்டுகட்டங்களாக நுழைவுத் தேர்வு நடந்தது. தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், இந்த ஆண்டு மட்டும், நுழைவுத் தேர்வு நடத்துவதில் இருந்துமாநிலங்களுக்கு விலக்கு அளிக்கும் வகையில், அவசரசட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது.
நிறைவேறின.
இந்த நிலையில், அடுத்த கல்வி ஆண்டு முதல், நாடு முழுவதும் பொது நுழைவுத் தேர்வு நடத்துவதற்காக, இந்திய மருத்துவ கவுன்சில் சட்டம் மற்றும் பல் மருத்துவச் சட்டத்தில் திருத்தம் செய்யும் இரண்டு மசோதாக்கள், லோக்சபாவில், கடந்த மாதம் நிறைவேறின.ராஜ்யசபாவில், இம்மாதம், 1ம் தேதி நிறைவேறியது. அதைத் தொடர்ந்து, இந்த மசோதாக்களுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, ஒப்புதல் அளித்துள்ளார்.அடுத்த ஆண்டு முதல்'இதன் மூலம், நாடுமுழுவதும் உள்ள அனைத்துஅரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளுக்கானமாணவர் சேர்க்கை, அடுத்த ஆண்டு முதல் நுழைவுத் தேர்வு மூலமே நடக்கும்.'இதனால், பல்வேறு நுழைவுத் தேர்வுகளை எழுத வேண்டிய நிலை தவிர்க்கப்படும்.மேலும், அதிக நன்கொடைகொடுப்பது, கவுன்சிலிங்கில் ஊழல் போன்றவையும் தடுக்கப்படும்' என, மத்திய சுகாதார துறை உயரதிகாரிகள் தெரிவித்தனர்.