தேசிய குடற்புழு நீக்க நாள்
தேசிய குடற்புழு நீக்க நாள்: 56 ஆயிரம் பள்ளிகள், 54 ஆயிரம் அங்கன்வாடிகளில் குடற்புழு நீக்க மாத்திரைகள் விநியோகம்
இன்று தேசிய குடற்புழு நீக்க நாளான இன்று தமிழகம்
முழுவதும் 56 ஆயிரம் பள்ளிகள், 54 ஆயிரம் அங்கன்வாடி மையங்களில் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படுகிறது என்று தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் (டிபிஎச்) டாக்டர் கே.குழந்தைசாமி தெரிவித்தார்.தேசிய குடற்புழு நீக்க நாள் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்தியாவில் 1 முதல் 14 வயதுடைய 24.1 கோடி குழந்தைகள் குடற்புழு தொற்று ஏற்படக்கூடிய நிலையில் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் ரத்த சோகையினால் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.6 மாதம் முதல் 5 வயதுடைய குழந்தைகளில் 10-ல் 7 குழந்தைகள் ரத்தசோகை நோயினால் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். 15 முதல் 19 வயதுடையவர்களில் 56 சதவீதம் பெண்களும், 30 சதவீதம் ஆண்களும் ரத்தசோகை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளில் 50 சதவீதம் உடல் வளர்ச்சிகுன்றியும், 34 சதவீதம் குழந்தைகள் எடை குறைவாகவும் உள்ளனர். இந்தப் பிரச்சினைகளுக்கெல்லாம் குடற்புழுக்கள் முக்கிய பிரச்சினை யாக இருக்கிறது. அதனால் ஆண்டுதோறும் தேசிய குடற்புழு நீக்க நாளில் சுகாதாரத்துறையின் சார்பில் குடற்புழுக்களை நீக்குவதற்கு 1 வயதுடைய குழந்தைகளுக்கு மருந்தும், 2 முதல் 19 வயதுடையவர்களுக்கு மாத்திரையும் வழங்கப்படுகிறது.இந்த ஆண்டு தேசிய குடற்புழு நீக்க நாளுக்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் பற்றி தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் (டிபிஎச்) டாக்டர் கே.குழந்தைசாமி கூறியதாவது:தமிழகம் முழுவதும் 54 ஆயிரத் துக்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்கள், 44 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளில் தேசிய குடற்புழு நீக்க நாளில் (இன்று) மாத்திரைகள் வழங்கப்பட உள்ளது.
இந்தப் பணியில் அங்கன்வாடி ஊழியர்கள், பள்ளி ஆசிரியர்கள், சுகாதார அலுவலர்கள் என 2.5 லட்சம் பேர் ஈடுபடுகின்றனர். 1 வயதுடைய குழந்தைகளுக்கு மருந்து வழங் கப்படும். 2 வயது முதல் 19 வயது டையவர்களுக்கு மாத்திரை வழங்குவோம்.மாத்திரையும் சுவையாக இருக்கும். சுவைத்துச் சாப்பிடலாம். 2.46 கோடி பேர் பயன்பெறுவார்கள் என்று நம்பு கிறோம். விடுபட்டவர்களுக்கு வரும் 17-ம் தேதி மாத்திரைகள் வழங்கப் படும். குடற்புழு நீங்கினால் ரத்த சோகை குணமாகிவிடும். படிக்கும் திறன் அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ஆரோக்கிய மாக இருப்பார்கள். இதுபோன்ற பல நன்மைகள் உள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.