வேளாண் 'டிப்ளமோ' படிப்பு: இன்று முதல் விண்ணப்பம்
கோவை வேளாண் பல்கலையில், 'டிப்ளமோ' படிப்புக்கான விண்ணப்ப வினியோகம், இன்றுதுவங்குகிறது. செப்., 2ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
கோவை வேளாண் பல்கலையின் இணைப்பில் உள்ள,மூன்று அரசு கல்லுாரிகள் மற்றும் ஐந்து இணைப்பு கல்லுாரிகளில், வேளாண் மற்றும் தோட்டக்கலையில், இரண்டு டிப்ளமோ படிப்புகள் நடத்தப்படுகின்றன. இந்த படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்கள், இன்று முதல், கல்லுாரிகளில்வினியோ- நமது நிருபர் - கிக்கப்படுகின்றன.பிளஸ் 2 தேர்வில், இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களில் தேர்ச்சி பெற்றோர், இந்த படிப்பில் சேரலாம்.
பூர்த்தி செய்தவிண்ணப்பங்களை, செப்., 2ம்தேதிக்குள் அனுப்ப வேண்டும். செப்., 14 மற்றும் 15ம் தேதிகளில், மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் நடக்கும். செப்., 19 முதல் வகுப்புகள் துவங்கும் என, தமிழ்நாடு வேளாண் பல்கலை அறிவித்துள்ளது.