புதுமையாக கற்பிக்கும் ஆசிரியர்கள் எஸ்.சி.இ.ஆர்.டி. இணையதளத்தில் வீடியோ வெளியீடு.
பொம்மலாட்டம் உள்ளிட்ட புதுமை யான முறையில் மாணவர்களுக்குப் பாடங்களைக் கற்றுத்தரும் ஈரோடு ஆசிரியர்களின் வீடியோ தொகுப் பைத் தமிழ்நாடு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (எஸ்
.சி.இ.ஆர்.டி) இணையதளத்தில் வெளியிட்டுள் ளது.
இதன்மூலம் இதர ஆசிரியர்களும் இத்தகைய முறையைப் பின்பற்றி எளிமையான முறையில் பாடங்களைக் கற்பிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.அரசுப் பள்ளிகளில் கற்பிக்கும் முறையை வித்தியாசப்படுத்த வேண்டும் என்பதற்காக ஆசிரியர் களுக்கு பயிற்சி வழங்க பள்ளிக் கல்வித் துறையில், மாநில கல்வியி யல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
தனியார் பள்ளிகளில் கற்பிக்கும் முறையைவிட, அரசுப் பள்ளிகளில் கற்பிக்கும் முறைகளை மேம்படுத்த புதிய முயற்சிகள் பலவற்றை மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. அதன்படி, கற்பித்தலில் புதுமையை புகுத்தும் ஆசிரியர் களின் செயல்பாடுகளை, மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவன இணையதளத்தில் (www.tnscert.org) வீடியோவாக வெளியிட முடிவு செய்யப்பட்டது. இதன் அடுத்தகட்டமாக தமிழகம் முழுவதும் 1,500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், தங்களது கற்பித்தல் முறைகளை விளக்கி, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்துக்கு கடந்த ஆண்டு விண்ணப்பித்தனர். இதில் மிகவும் வித்தியாசமான முறையில் மற்றும் புதுமையாகக் கற்பித்த 100 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களின் வகுப்பறை கற்பித்தல் செயல்பாடுகளை வீடியோவாக எடுக்கும் பணி தமிழகம் முழுவதும் நடைபெற்றது . இதில் 100 ஆசிரியர்களின் புதுமையான கற்பித்தல் முறையை ஆவணப் படம் போல மாநில கல்வி யியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் இணையதளத்தில் வீடி யோவாக பதிவேற்றம் செய்து வருகிறது.
இதில் ஈரோடு மாவட் டத்தைச் சேர்ந்த 3 ஆசிரியர்களின் கற்பித்தல் முறை குறித்த வீடியோ இடம்பெற்றுள்ளது. ஈரோடுமாவட்டம் மொடக் குறிச்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நாதகவுண்டன் பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இடை நிலை ஆசிரியர் தே.தாமஸ் ஆண்டனி (பொம்மலாட்டம் மூலம் கல்வி கற்பித்தல்), பவானி ஒன்றியம் சின்னியம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியை எம்.சுதா (பழைய செயல்வழிக் கற்றல் அட்டை மூலம் வகுப்பறையை அழகுபடுத்துதல் மற்றும் கற்றல் பயிற்சியை மேம் படுத்துதல்), பவானி ஒன்றியத்தில் உள்ள ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசி ரியை வாசுகி (வாழ்க்கைக் கல் வியை அனுபவ பயிற்சி மூலம் கற்பித்து மாணவர்களை உணரச் செய்தல்) ஆகியோரின் கல்வி கற் பித்தல் முறை குறித்த வீடியோ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வாறு பதிவேற்றப்படும் வீடியோவால் மற்ற ஆசிரியர்களும் இந்த வீடியோவைப் பார்த்து புதுமையாகவும்எளிமையாகவும் கற்பிப்பார்கள் என்ற நோக்கத்தின் அடிப்படையில் இந்த கற்பித்தல் முறையை அங்கீகரித்து இவ்வாறு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த முயற்சி வரும் கல்வியாண்டி லும் தொடரும் என்றும் இதன் மூலம் புதிய முறையில் வித்தியாசமாக கற்பிக்கும் ஆசிரியர்களின் திறமைகள் இணையதளத்தில் வெளியிடப்படும் எனவும் எஸ்.சி.இ.ஆர்.டி தெரிவித்துள்ளது.