பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, மத்திய அரசின் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான, என்.சி.இ.ஆர்.டி., சார்பில், தேசிய திறனறித் தேர்வு
, இரண்டு கட்டமாக நடத்தப்படுகிறது.
மாநில அளவில் தேர்வு நடத்தி, அதில் தேர்ச்சி பெறுவோர், இரண்டாம் கட்ட தேர்வுக்கு தகுதி பெறுகின்றனர். இந்த தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படிக்கும் போது, மாதம், 1,250 ரூபாயும், பட்டப்படிப்பு படிக்கும் போது மாதம், 2,000 ரூபாயும் உதவித்தொகை வழங்கப்படும்.தமிழகத்தில், நடப்பு கல்வியாண்டில் இத்தேர்வு, நவ., 6ல் நடக்கும். இதற்கான விண்ணப்ப அறிவிப்பை, தமிழக அரசின் தேர்வுத்துறை வெளியிடும் என, என்.சி.இ.ஆர்.டி., தெரிவித்துள்ளது.