TNPSC:தமிழக அரசில் 5451 பணியிடங்களுக்கான குரூப் - 4 தேர்வு அறிவிப்பு.


            2015-16 ஆண் ஆண்டிற்கான தொகுதி -IV பணியில் அடங்கிய 5451 இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் கிரேடு -3, நிலஅளவர், வரைவாளர் பணியிடங்களுக்கு நேர
டி நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்விற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
இதற்கான எழுத்துத் தேர்விற்கு செப்டம்பர் 8 வரை இணைய வழி மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அறிவிக்கை எண்:15/2016
விளம்பர எண்:445/2016
தேதி:09.08.2016

பணி:Junior Assistant (Non - Security) - 2345
பணி:Junior Assistant (Security) - 121
பணி:Bill Collector, Grade-I - 08
பணி:Field Surveyor - 532
பணி:Draftsman - 327
பணி:Typist - 1714
சம்பளம்:மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400

பணி:Steno-Typist, Grade-III - 404
சம்பளம்:மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800

விண்ணப்பதாரர்கள் பதிவுக்கட்டணமாக ரூ.50-ஐ செலுத்தி தங்களது அடிப்படை விவரங்களை நிரந்தரப்பதிவு மூலமாக கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும் (பதிவு செய்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது)தேர்வுக் கட்டணம்:ரூ.75. நிரந்தரப் பதிவு முறையில் ஏற்கனவே பதிவு செய்தவர்கள். தேர்வுக்கட்டணம் மட்டும் செலுத்தினால் போதுமானது.

வயதுவரம்பு:01.07.2016 தேதியின்படி கணக்கிடப்படும். 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். பிசி, எம்பிசி வகுப்பி னருக்கு வயது வரம்பு 32 ஆகவும், எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கும் அனைத்து வகுப்பைச் சேர்ந்த ஆதரவற்ற விதவைகளுக்கும் 35 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. எனினும், குறைந்தபட்ச கல்வித் தகுதியான எஸ்எஸ்எல்சி படிப்புக்கு மேல் அதாவது பிளஸ் 2, பட்டப் படிப்பு, முதுநிலை படித்திருந்தால் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கும் அனைத்து வகுப்புகளையும் சேர்ந்த ஆதரவற்ற விதவைகளுக்கும் வயது வரம்பு எதுவும் கிடையாது.

தகுதி:குறைந்தபட்ச பொதுக்கல்வித் தகுதி அதாவது பள்ளியிறுதி வகுப்பு (10-ம் வகுப்பு) அல்லது அதற்கு சமமான கல்வியில் தேர்ச்சி பெற்று மேல்நிலைப்பள்ளிக் கல்வி அல்லது கல்லூரிக் கல்வி படிப்பில் தேர்வதற்கான தகுதி, பட்டம் பெற்றிருத்தல், அரசு தொழில்நுட்பத் தட்டச்சுத் தேர்வில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முதுநிலை, இளநிலை தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

விண்ணப்பிக்கும் முறை:www.tnpscexams.net/www.tnpscexams.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:08.09.2016

கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி:11.09.2016

தேர்வு நடைபெறும் தேதி:06.11.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tnpsc.gov.in/notifications/2016_15_not_tam_grp_iv_services.pdf என்ற அதிகாரப்பூர்வ இணையதள அறிக்கைக்கான லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)