10 ஆயிரம் அரசு அலுவலகங்களுக்கு விரைவில் புதிய தமிழ் 'சாப்ட்வேர்'


       சென்னை: ''தமிழில் இலக்கண பிழையின்றி எழுத உதவும், புதிய மென்பொருள், முதல் கட்டமாக, 10 ஆயி
ரம் அரசு அலுவலகங்களுக்கு வழங்கப்படும்,'' என, தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர், சேவூர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.

சட்டசபையில், நேற்று அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:

அசாம் மாநிலம், கவுகாத்தி பல்கலையில், தமிழை விருப்பப் பாடமாக பயிலும், ஆறு மாணவர்களுக்கு, 1.39 லட்சம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்

தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் நாடுகளில் ஒன்று, மொரீஷியஸ்; அங்குள்ள தமிழர்களுக்கு, ஆண்டுதோறும், ஏழு லட்சம் ரூபாய் செலவில், தமிழ் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்
பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு, ஆண்டுதோறும் நடக்கும் பேச்சு போட்டிகளில், முதல் மற்றும் இரண்டாம் பரிசு வழங்கப்படுகிறது; இனி, மூன்றாவது பரிசாக, 5,000 ரூபாய் வழங்கப்படும்; இதற்கு, 9.6 லட்சம் ரூபாய் கூடுதலாக செலவாகும்
கம்ப்யூட்டரில், ஆங்கில மொழியில் பிழை திருத்தும் வசதி இருப்பதைப் போல், தமிழிலும், இலக்கணப் பிழையை சுட்டிக்காட்டி திருத்தும், புதிய மென்பொருள் உருவாக்கப்பட்டு உள்ளது; 300 ரூபாய் விலையுடைய அது, முதல் கட்டமாக, 10 ஆயிரம் அரசு அலுவலகங்களுக்கு வழங்கப்படும்.இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)