2-ம் கட்ட உள்ளாட்சி தேர்தல்: சென்னை மாநகராட்சிக்கு 19-ந்தேதி வாக்குப்பதிவு


சென்னை,சென்னை மாநகராட்சிக்கு 2-ம் கட்டமாக 19-ந்தேதி வாக்குப்பதிவு நடக்கிறது.2-ம் கட்ட வாக்குப்பதிவுஉள்ளாட்சி தேர்தலில் திருச்சி, நெல்லை, திண்டுக்கல், மதுரை,
கோவை ஆகிய 5 மாநகராட்சி மேயர் பதவிகள் பெண்களுக்கு(பொது) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை, சேலம், ஈரோடு, தஞ்சாவூர், திருப்பூர் ஆகிய 5 மாநகராட்சிகள் பொதுப்பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பதவி எஸ்.சி.(பொது) பிரிவினருக்கும், வேலூர் மாநகராட்சி மேயர் பதவி எஸ்.சி.(பெண்களுக்கும்) ஒதுக்கீடு செய்யப்பட்டது.இதில், திருச்சி, நெல்லை, மதுரை, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர், தஞ்சாவூர், வேலூர், தூத்துக்குடி ஆகிய 10 மாநகராட்சிகளுக்கு அக்டோபர் 17-ந்தேதி முதற்கட்டமாகவும், சென்னை, திண்டுக்கல் ஆகிய 2 மாநகராட்சிகளுக்கு 2-ம் கட்டமாக 19-ந்தேதியும் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.இன்று வேட்புமனுபொதுப்பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள சென்னை மாநகராட்சியில் தற்போது 200 வார்டுகள் உள்ளன. இதில் 16 வார்டுகள் எஸ்.சி.(பொது), 16 வார்டுகள் எஸ்.சி.(பெண்கள்), 92 வார்டுகள் பெண்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் பெண்களுக்கு 108 வார்டுகள் கிடைத்துள்ளது.124 வார்டுகள் தவிர மீதமுள்ள 76 வார்டுகள் பொதுப்பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் கட்சி தொண்டர்களிடம் அந்தந்த கட்சி தலைமை விருப்ப மனுக்களை பெற்று வரும் வேளையில், இன்று(திங்கட்கிழமை) முதல் வேட்புமனுதாக்கல் தொடங்க உள்ளது.மாநகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட விரும்புவோர் அந்தந்த மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தங்களுடைய வேட்பு மனுவை தாக்கல் செய்யலாம்.வேட்புமனு நேரம் நீட்டிப்புகடந்த ஆண்டு 2011-ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலின் போது காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்வதற்கு நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டு கூடுதலாக 3 மணி நேரம் நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம்.சென்னை மாநகராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தல் செலவு உச்சவரம்பு தொகையாக ரூ.90 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.எந்தெந்த நகராட்சிகள்2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ள நகராட்சிகள், ஊராட்சிகள், பேரூராட்சிகளின் பதவி இடங்களுக் கான எண்ணிக்கையை மாநில தேர்தல் ஆணையர் பெ.சீத்தாராமன் நேற்று வெளியிட்டார். முதல் கட்டமாக எந்தெந்த நகராட்சிகள், ஊராட்சிகள், பேரூராட்சிகளில் தேர்தல் நடைபெறும். 2-வது கட்டமாக எந்தெந்த நகராட்சிகள், ஊராட்சிகள், பேரூராட்சிகளில் தேர்தல் நடைபெறும் என்பது குறித்த அறிவிப்பு இன்று(திங்கட்கிழமை) வெளியிடப்படும் என்று அவர் தெரிவித்தார்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)