செப். 21-இல் எம்.பி.பி.எஸ். 2-ஆம் கட்டக் கலந்தாய்வு


       எம்.பி.பி.எஸ்.- பி.டி.எஸ். மாணவர் சேர்க்கைக்கான இரண்டாம் கட்டக் கலந்தாய்வு செப். 21-இல் தொடங்கும் என தேர்வுக் குழு அதிகாரிகள் கூறினர்.


      இந்திய மருத்துவக் கவுன்சிலின் விதிகளின்படி. மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும்.

மத்திய அரசு பிறப்பித்த அவசரச் சட்டம் காரணமாக, தமிழகத்தில் நிகழ் கல்வி ஆண்டில் (2016-17) "நீட்' தேர்வு மதிப்பெண் அடிப்படையில் அல்லாமல், பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் முதல் கட்டக் கலந்தாய்வு சென்னையில் ஜூன் 21 முதல் 25 வரை நடைபெற்றது.
நிரப்பப்பட்ட இடங்கள்: சென்னை மருத்துவக் கல்லூரி உள்பட 21 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாநில ஓதுக்கீட்டுக்கு உரிய 2,383 எம்.பி.பி.எஸ். இடங்கள், சுயநிதி கல்லூரிகளின் 470 அரசு ஒதுக்கீட்டு இடங்கள், சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியின் 85 பி.டி.எஸ். இடங்கள் ஆகியவற்றை நிரப்ப முதல் கட்டக் கலந்தாய்வு நடைபெற்றது.
முடிவில் 21 அரசு கல்லூரிகளின் 2,383 இடங்கள் நிரப்பப்பட்டன; சுயநிதி கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் உள்ள 72 இடங்களும், பாரிமுனை அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 7 பி.டி.எஸ். இடங்களும் காலியாக இருந்தன.
122 இடங்கள்: கலந்தாய்வில் பங்கேற்று மாணவர்கள் கல்லூரிகளில் சேராததால் 122 காலியிடங்கள் உள்ளன. இதேபோன்று அரசு பி.டி.எஸ். காலியிடங்கள், சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகள் சமர்ப்பித்துள்ள 970 அரசு ஒதுக்கீட்டு பி.டி.எஸ். காலியிடங்களை நிரப்பவும் இரண்டாம் கட்டக் கலந்தாய்வு நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
அகில இந்திய ஒதுக்கீடு காரணமாக...: அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மொத்த இடங்களில் 15 சதவீத எம்.பி.பி.எஸ். இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகிறது. இந்த இடங்களை "நீட்' தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மத்திய சுகாதாரத் துறை நிரப்ப உள்ளது. இதன் பிறகு தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஏற்பட்டுள்ள காலியிடங்கள் குறித்த விவரத்தை செப். 20-இல் அளிப்பதாக மத்திய சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, இரண்டாம் கட்டக் கலந்தாய்வு சென்னை அரசினர் தோட்டத்தில் உள்ள ஓமந்தூரார் அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை அரங்கில் 21-இல் தொடங்கும் என்று தேர்வுக் குழு அதிகாரிகள் கூறினர்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

Class 6th English Learning Outcomes Chapter-1

6,7,8,9,10 Std English Notes of Lesson Collection 2022