3 ஆண்டுகளுக்கு பிறகு புதுச்சேரி பல்கலையில்...பட்டமளிப்பு விழா!

3 ஆண்டுகளுக்கு பிறகு புதுச்சேரி பல்கலையில்...பட்டமளிப்பு விழா! ஆன்-லைனில் பெயர் பதிவுகள் வரவேற்பு!!

           புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் மூன்றாண்டுகளுக்கு பிறகு வரும் 4ம் தேதி பட்டமளிப்பு விழா நடத்தப்பட உள்ளது. அதற்கான பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.

        புதுச்சேரி பல்கலைக்கழகம் 1985ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. மத்திய அரசின் அகில இந்திய அளவிலான தரவரிசை பட்டியலில் 13வது இடத்தை பிடித்து சாதித்த
இப்பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிப் பணிகள் சில ஆண்டுகளாக சொல்லி கொள்ளும்படியாக இல்லை.

மத்திய அரசின் நிதியளிப்பு குறைந்த பிறகு தள்ளாட்டம் கண்டு வருகிறது. இதுபோன்ற சூழ்நிலையில் நிர்வாக சிக்கலில் திணறிய பல்கலைக்கழகத்திற்கு 2013, 2014, 2015 ஆண்டுகளில் பட்டமளிப்பு விழா நடத்தப்படவில்லை.
பட்டமளிப்பு விழா நடத்துவதற்கான முடிவுகள் எடுக்க கூட தடை விதிக்கப்பட்டிருந்தது. இது பட்டதாரிகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. டிகிரி சான்றிதழ் கிடைக்காத மாணவர்கள் புரோபேஷனல் சான்றிதழை கொண்டு சமாளித்து வந்தனர்.
பட்டமளிப்பு விழா
இதற்கிடையில் பல்கலைக்கழகத்திற்கு மீண்டும் பட்டமளிப்பு விழா நடத்த துணை வேந்தர் அனிஷா பஷீர்கான் முழு முயற்சி எடுத்து வருகிறார். பல்கலைக்கழகத்தின் 24வது பட்டமளிப்பு விழா வரும் 4ம் தேதி காலை 10 மணிக்கு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டுத் துறை முழு வீச்சில் முடுக்கிவிட்டுள்ளது.
கவர்னருடன் சந்திப்பு
பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிற்கு வழக்கமாக பிற மாநிலங்களிலிருந்து பல்துறை நிபுணர்களை அழைத்து வருவது வழக்கம்.இந்தாண்டு கவர்னர் கிரண்பேடி, முதல்வர் நாராயணசாமியை அழைக்க பல்கலைகழகம் முடிவு செய்துள்ளது.
கவர்னர் கிரண்பேடியை, பல்கலைக்கழக துணைவேந்தர் அனிஷா பஷீர்கான் நேற்று நேரில் சந்தித்து முறைப்படி அழைப்பு விடுத்தார். கவர்னரும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதாக உறுதியளித்துள்ளார்.
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் 1,500 பட்டதாரிகள் வரை, தங்களுடைய பாடங்களில் 'டாப்' பெற்று சிறந்து விளங்கியுள்ளனர். இவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடத்தி தங்கப்பதக்கம் வழங்கி கவுரவிக்கப்படவில்லை. இது பெரும் குறையாக இருந்தது. மூன்றாண்டுகளுக்கு பிறகு பட்டமளிப்பு விழா நடத்தப்படுவதால் பாடப்பிரிவு வாரியாக முதலிடம் பிடித்தவர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
ஆன்-லைன் பெயர் பதிவு
பட்டமளிப்பு விழாவில் பட்டம் வாங்க விரும்பும் பட்டதாரிகளிடமிருந்து ஆன்-லைனில் பெயர் பதிவுகள் வரவேற்கப்பட்டுள்ளது.
நேற்று வரை 500 பேர் பதிவு செய்திருந்தனர். இன்று 27ம் தேதி 1.30 மணியுடன் ஆன்-லைன் பெயர் பதிவு முடிவடைகிறது. வழிகாட்டுதலுக்கு 0413-2654204, 2654210 என்ற பல்கலைகழக எண்களை தொடர்பு கொள்ளலாம்

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)