31 மாவட்டங்களில் கட்டட வரைபட அனுமதிக்கு ஆன்லைன் முறை: தமிழக அரசு அறிவிப்பு


       சென்னையைத் தவிர்த்து, 31 மாவட்டங்களில் கட்டட வரைபட அனுமதிக்கு ஆன்-லைன் முறை அறிமுகப்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்து
ள்ளது.

     இது குறித்து, நகர்-ஊரமைப்புத் துறை ஆணையாளர் (பொறுப்பு) தர்மேந்திர பிரதாப் யாதவ், வெளியிட்டுள்ள சுற்றறிக்கை விவரம்: கட்டட வரைபட அனுமதி தொடர்பான பரிசீலனையை ஆன்-லைன் மூலம் மேற்கொள்ளும் வசதிகளைக் கொண்ட மென்பொருள் தயாரிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரரிடம் இருந்து கைப்பட வரையப்பட்ட கட்டிட வரைபடத்தைப் பெறும் தற்போதய நடைமுறை, இதன் மூலம் மாற்றப்படுகிறது.
எனவே கட்டட வரைபடத்தை இனிமேல்  http:www.dtcp.tn.gov.in என்ற இணையதளத்தில் காணப்படும் e-dcr என்ற மென்பொருள் மூலம் சமர்ப்பிக்க வேண்டும். இது தவிர, கட்டட அனுமதி கேட்பது, சம்பந்தப்பட்ட ஆவணங்களைச் சமர்ப்பிப்பது உட்பட மற்ற நடைமுறைகளை தற்போதுள்ள முறைப்படியே தொடரும்.
கட்டட வரைபட அனுமதியை ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்கும் நடைமுறையை தவறாக அமல்படுத்தினால் அது கடுமையாக கண்காணிக்கப்படும். இந்த புதிய நடைமுறை தொடர்பாக விண்ணப்பதாரர், கட்டட அளவையாளர்கள், கட்டட நிபுணர்கள் ஆகியோருக்கு தகவல் அளிக்க வேண்டும் என தனது சுற்றறிக்கையில் தர்மேந்திர பிரதாப் யாதவ் தெரிவித்துள்ளார்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

10th Std English One Mark Question Bank