உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்கள் பட்டியலில் 31 இந்தியக் கல்வியகங்கள்!


        உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களின் பட்டியலில், இதுவரை இல்லாத வகையில் 31 இந்தியக் கல்வி நிறுவனங்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

          உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களின் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வரும் பிரிட்டனைச் சேர்ந்த "டைம் ஹையர் எஜுகேஷன்' பத்திரிகை, 2016-17-ஆம் ஆண்டுக்கான அந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதில், தெற்காசியாவிலிருந்து மொத்தம் 39 பல்கலைக்கழகங்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் இதுவரை இல்லாத சாதனை அளவாக 31 இந்தியக் கல்வி நிறுவனங்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
முதல் இடத்தில் பிரிட்டனின் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகமும், 5 முறை முதலிடம் பிடித்த கலிபோர்னியா தொழில் நுட்ப பல்கலைக்கழகம் 2-வது இடத்திலும், ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம் 3-வது இடத்திலும் உள்ளன.
முதல் 200 இடங்களில் எந்த இந்தியக் கல்வியகத்தின் பெயரும் இடம் பெறாத நிலையில், பெங்களூரைச் சேர்ந்த இந்திய அறிவியல் கல்வி நிறுவனம் (ஐ.ஐ.எஸ்.ஸி), 251-லிருந்து 300-க்குள்ளான இடத்தைப் பிடித்துள்ளது.
351-லிருந்து 400-க்குள்ளான இடப் பிரிவில் மும்பையைச் சேர்ந்த இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (ஐ.ஐ.டி.) இடம் பிடித்துள்ளது.
401-500 இடப் பிரிவில் சென்னை ஐ.ஐ.டி., தில்லி ஐ.ஐ.டி., கான்பூர் ஐ.ஐ.டி. ஆகியவை இடம் பெற்றுள்ளன.
கரக்பூர், ரூர்கீ ஆகிய நகரங்களின் ஐ.ஐ.டி.க்கள், 501-600 இடப் பிரிவில் இடம் பிடித்துள்ளன.
பட்டியலில் இடம் பெறும் கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை 800-லிருந்து 980-ஆக அதிகரிக்கப்பட்டுள்ள நிலையிலும், முதல் 800 இடங்களில் 19 இந்தியக் கல்வி நிறுவனங்கள் இடம் பிடித்துள்ளன. இது கடந்த ஆண்டைவிட இரண்டு கூடுதலாகும்.
இந்தியாவிலிருந்து 14 கல்வி நிறுவனங்கள் இப்பட்டியலில் முதன்முறையாக இடம்பிடித்துள்ளன. தமிழகத்தைச் சேர்ந்த அம்ரிதா பல்கலைக்கழம், சாஸ்த்ரா பல்கலைக்கழகம், சத்யபாமா பல்கலைக்கழகம், எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம், வேலூர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் ஆகியவையும் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

Class 6th English Learning Outcomes Chapter-1

6,7,8,9,10 Std English Notes of Lesson Collection 2022