தில்லி காவல் துறையில் 4669 கான்ஸ்டபிள் பணி: இருபாலர்களும் விண்ணப்பிக்க அழைப்பு


தில்லி காவல் துறையில் நிரப்பப்பட உள்ள 4669 கான்ஸ்டபிள் பணிக்கான அறிவிப்பை ஸ்டாப் செலக்சன் கமிஷன், தில்லி மத்திய போலீஸ் படை வெளியிட்டுள்ளது.



மொத்த காலியிடங்கள்: 4,669
ஆண்கள்: 3,115
பெண்கள்: 1,554
வயது வரம்பு: 1.7.2016 தேதியின்படி ஆண் விண்ணப்பதாரர்கள் 18 - 21க்குள்ளும், பெண் விண்ணப்பதாரர்கள் 18 - 25க்குள்ளும் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி எஸ்சி, எஸ்டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
கல்வித்தகுதி: +2 டித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு, உடல் அளவுத் தேர்வு, உடல்திறன் தேர்வு, மருத்துவ பரிசோதனை மற்றும் குற்றப் பின்னணி விசாரணை ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100. எஸ்சி, எஸ்.டி பிரிவினர், முன்னாள் படைவீரர்கள் மற்றும் பெண்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.10.2016
கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 13.10.2016
எழுத்து தேர்வு நடை பெறும் தேதி: 04.03.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.ssconline.nic.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)