ரிலையன்ஸ் ஜியோவும், உங்களுக்குள் எழும் 5 கேள்விகளுக்கான விடைகளும்..!

ஒருபக்கம் நம் அனைவருக்குமே ரிலையன்ஸ் ஜியோவின் முன்னோட்ட சலுகை தேவைப்படுகிறது, மறுபக்கம் ரிலையன்ஸ் வணிக ரீதியாக கூட இல்லாது தங்கள் 4ஜி நெட்வெர்க்கை தொடங்கி
மார்க்கெட்டில் ஒரு ஆட்சியையே பிடித்து விட்டது. ரிலையன்ஸ் ஜியோ பற்றி யோசிக்கும் போது "டே.. அலாவுதீன் பூதம் போல நீங்கலாம் 'டக்'குனு எங்க இருந்துடா கிளம்பி வறீங்க..?" என்ற கேள்வியை தவிர்த்து சில முக்கியமான பிற கேள்விகளும் எழுகின்றன. அந்த கேள்விகளும் அதற்கான விடைகளும்தான் கீழ்வரும் ஸ்லைடர்களில் தொகுக்கப்பட்டுள்ளன.

கேள்வி நம்பர் #01 ஜியோவின் 90 நாட்களுக்கான முன்னோட்ட சலுகை முடிந்த பின்பு வாடிக்கையாளர்கள் என்ன செய்ய வேண்டும்..? 

விடை : 90 நாட்களுக்கு பின்பு வழங்கப்படும் கட்டண திட்டகளில் விருப்ப தேர்வை நிகழ்த்தி சேவைகளை தொடர்ந்து பயன்படுத்திக்கொள்ள முடியும். (அதாவது 50 பைசாவிற்கு ஒரு எம்பி என்கிறது ரிலையன்ஸ் நிறுவனத்தின் கசிந்த ஒரு கட்டண திட்டம்) 

கேள்வி நம்பர் #02 ரிலையன்ஸ் ஜியோவின் வர்த்தக ரீதியான வெளியீடு எப்போது..? 

விடை : செப்டம்பர் 1 முதலாக தொடங்கி டிசம்பர் 2015 வரையிலான ரிலையன்ஸின் வணிக நோக்கத்திலான வெளியீடு வரலாம். 

கேள்வி நம்பர் #03 ரிலையன்ஸ் நிறுவனத்தின் இந்த சலுகை சட்டப்படியானதா..? 

விடை : இந்த இலவச முன்னோட்ட சலுகையின்படி ரிலையன்ஸ் நியாயமற்றவராக மற்றும் வேடமிட்ட வணிக நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உண்மைநிலை என்னவென்றால் இச்சலுகை சட்டப்பூர்வம் மற்றும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின்கீழ் ஒரு கண்டறிய முடியாத நிலைப்பாட்டில்தான் உள்ளது 

கேள்வி நம்பர் #04 வாய்ஸ் கால் பற்றிய நிலை என்ன..? 

விடை : 65% கால் டிராப்களை ரிலையன்ஸ் சந்திக்கிறது, ஆக வாய்ஸ் கால்களில் சிறப்பான நிலையை அடைய மற்ற நெட்வொர்க்குகள் உடனான இணைப்புத் புள்ளியின் அதிகம் தேவைப்படுகிறது 

கேள்வி நம்பர் #05 தற்போதைய நெட்வெர்க்கில் இருந்து ஜியோவிற்கு என் எண்ணை போர்ட் செய்யலாமா..? 

விடை : ஜியோவை ரிலையன்ஸ் அதிகாரப்பூர்வமாக தொடங்கவில்லை ஆக நீங்கள் உங்கள் தொலைப்பேசி எண்ணை போர்ட் செய்ய இயலாது. மறுபக்கம் இந்தியா இதுபோன்ற ஸ்மார்ட்போன் டேட்டா புரட்சி வினையூக்கப்படுத்த நெட்வொர்கிற்காகத்தான் நீண்ட காலமாக காத்திருந்தது. ஆக, அதிகாரப் பூர்வமான வெளியீட்டுக்காக காத்திருப்பது மிக நல்லது.


Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)