தொழில்நுட்ப தேர்வு அக்டோபர் 5ல் 'ரிசல்ட்'


           ஓவியம், தையல் உள்ளிட்ட தொழில் நுட்ப தேர்வு முடிவு, 10 மாதங்களுக்கு பின், அக்., 5ல் வெளியிடப்படுகிறது. 


               ஓவியம், தையல், நடனம், இசை உள்ளிட்ட பாடங்களுக்கு, நவம்பர், 2015ல் தேர்வு நடத்தப்பட்டது; 50 ஆயிரத்தும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஆனால், தேர்வு முடிவுகள், 10 மாதங்களாக வெளியிடப்படவில்லை. தற்போது, அக்., 5ல் முடிவுகள் வெளியாகும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

அரசு தேர்வுத் துறை இயக்குனர், வசுந்தராதேவி கூறியுள்ளதாவது: இந்த தேர்வுக்கான, மேல்நிலை மற்றும் கீழ்நிலை சான்றிதழ்கள், அந்தந்த தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளரால், அக்., 5 முதல் அக்., 25 வரை வினியோகிக்கப்படும். தேர்ச்சி பெறாதோருக்கு, தேர்வு மையத்திலேயே, அதற்கான குறிப்பாணை வழங்கப்படும்; இருப்பிட முகவரிக்கு சான்றிதழ்கள் அனுப்பப்பட மாட்டாது. இவ்வாறு அவர்கூறியுள்ளார்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)