7வது சம்பள கமிஷனில் 'கிராஜுவிட்டி' இரட்டிப்பு..

7வது சம்பள கமிஷனில் 'கிராஜுவிட்டி' இரட்டிப்பு.. 10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்வு..!
       7வது சம்பள கமிஷனின் பரிந்துறைப்படி தொழிலாளர் கிராஜுவிட்டி ரூ.10 லட்சத்தில் இருந்து 20 லட்சம் ரூபாயாக அரசு உயர்த்தியுள்ளது. இது அரசு ஊழியர்களுக்கு ஒரு
இனிப்பான செய்தியாகும்.

       இது நாம் இந்த கிராஜுவிட்டி மூலம் பெற இருக்கும் தொகையை எங்கு முதலீடு செய்து என்பதைப் பார்க்கும் முன்பு கிராஜுவிட்டி என்றால் என்ன? என்று பார்ப்போம்.
கிராஜுவிட்டி என்றால் ஊழியர்கள் ஒரு நிறுவனத்தில் பணியாற்றிய சேவையைப் பாராட்டும் வகையில் அந்நிறுவனத்தால் பணி ஓய்வின் போது அளிப்பதாகும்.
ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஏதேனும் காரணங்களுக்காக பணி ஓய்வு பெறலாம். அப்போது அந்த ஊழியர் ஐந்து வருடங்கள் அல்லது அதற்கு மேலாகப் பணி புரிந்திருந்தால் வருமான வரி சட்டத்தின் படி நிறுவனம் கிராஜுவிட்டி அளிக்க வேண்டும்.
அரசுத் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்குப் பணி ஓய்வின் போது அல்லது பணியில் இருக்கும் போதே காலமான போது ஊழியர்களுக்கு அவரின் பணியை பாராட்டும் விதமாக ஒரு ஒட்டுமொத்த தொகையை கிராஜூவிட்டியாக வழங்கப்படும்.
இதுவரை பணி செய்த மொத்த ஆண்டிற்கும் அரை மாத ஊதியம் விதம் எனக் குறைந்தபட்சம் இரண்டரை மாத ஊதியம் முதல் அதிகபட்சமாக பதினாறரை மாத ஊதியம் கிராஜுவிட்டியாக வழங்கப்படும்.
இந்த கிராஜுவிட்டி தொகையின் அதிகபட்ச வரம்பாக ரூ.10 லட்சம் என்று இருந்தது. இப்போது 7வது சம்பள கமிஷனின் பரிந்துறைப்படி 20 லட்சம் ரூபாயாக மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
பணியில் சேர்ந்த ஓர் ஆண்டில் காலமான ஊழியர்களுக்குக் குறைந்தபட்ச பணிக்காலம் கணக்கிடப்படாமல் இரண்டு மாத சம்பளமும், ஒன்று முதல் ஐந்து ஆண்டிற்குள் இறந்தால் 6 மாத சம்பளமும், 5 முதல் 20 ஆண்டு பணி செய்து இறந்த ஊழியர்களுக்கு 12 மாத சம்பளமும், 20 வருடத்திற்கும் மேலாகப் பணியில் இருந்த ஊழியர்களுக்கு ஆண்டுக்கு அரை மாத சம்பளமும் கணக்கிடப்பட்டு கிராஜுவிட்டி வழங்க வேண்டும்.
இப்போது 7வது சம்பள கமிஷனின் பரிந்துறைப்படி தொழிலாளர் கிராஜுவிட்டி ரூ.10 லட்சத்தில் இருந்து 20 லட்சம் ரூபாயாக அரசு உயர்த்தியுள்ள நிலையில் இந்தத் தொகையை எப்படி முதலீடு செய்து தொடர்ந்து வருமானம் பெறலாம் என்பதை நாம் இங்குப் பார்ப்போம்

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

10th Std English One Mark Question Bank