90 நாளுக்கு 30ஜிபி சிறப்பு திட்டம்: ஜியோவுக்கு போட்டியாக ஏர்டெல் 4ஜி டேட்டா சலுகை


ஜியோவுக்கு போட்டியாக ஏர்டெல் நிறுவனமும் 4ஜி டேட்டா சேவையில் புதிய சலுகையை அறிவித்துள்ளது. இத்திட்டத்தின்படி, 90 நாட்களுக்கு 30ஜிபி 4ஜி டேட்டாவை வழங்குகிறது.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் களமிறங்கியதைத் தொடர்ந்து, மற்ற செல்போன் நிறுவனங்களுக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. ஜியோ அறிவித்த 1 ஜிபி 4ஜி டேட்டா ரூ.50க்கு என்ற திட்டம் வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. தற்போது அதற்கு போட்டியாக ஏர்டெல் புதிய 4ஜி டேட்டா சலுகையை அறிவித்துள்ளது.இந்த திட்டத்தில் இணைய, பழைய வாடிக்கையாளர்கள் ரூ.1,495ம், புதிய வாடிக்கையாளர்கள் ரூ.1,494ம் கட்டணம் செலுத்த வேண்டும். இதில், 90 நாட்களுக்கு 30 ஜிபி 4ஜி டேட்டா வழங்கப்படும். 

இந்த காலகட்டத்துக்குள் 30 ஜிபி வரை 4ஜி டேட்டாவும், அதற்கு மேற்பட்ட டேட்டாக்கள் 2ஜி சேவையாகவும் வழங்கப்படும். இது குறித்து ஏர்டெல் நிறுவன உயர் அதிகாரி கூறியதாவது: ஒரு ஜிபி ரூ.50க்கு என்ற அடிப்படையில் 30 ஜிபி டேட்டா கொண்ட இந்த புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது ஜியோ நிறுவனத்தின் திட்டத்தை காட்டிலும் சிறந்தது. ஜியோவில் ரூ.1,499க்கு 20 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. அதாவது, ஒரு ஜிபி ரூ.75 ஆக உள்ளது. அதுவும் 28 நாட்கள் மட்டுமே செல்லுபடியாகக் கூடியது. இதில், வாடிக்கையாளர்கள் அதிகளவு பயன்படுத்தத் தவறினால், ஒரு ஜிபிக்கு இன்னும் அதிகமான கட்டணம் செலுத்தியதாக இருக்கும்.

4ஜி வசதி கொண்ட செல்போன்களை  பயன்படுத்துபவர்கள் அதிக அளவில் இணைய வசதியை பயன்படுத்துவதால், டேட்டா அதிக அளவில் செலவாகும். அவர்களை மனதில் கொண்டுதான் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். இந்த திட்டம் முதற்கட்டமாக டெல்லியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் வரவேற்பை தொடர்ந்து, நாடு முழுவதும் விரைவில் புதிய 4ஜி திட்டத்தை அமல்படுத்த ஏர்டெல் முடிவு செய்துள்ளது

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

10th Std English One Mark Question Bank