ரயில் பயணிகளுக்காக அறிவிக்கப்பட்டுள்ள 92 பைசா காப்பீடு

ரயில் பயணிகளுக்காக அறிவிக்கப்பட்டுள்ள 92 பைசா காப்பீடு திட்டத்தில் 28 லட்சம் பேர் பதிவு: திட்டத்தை விளக்கி 4 கோடி பேருக்கு இ-மெயில்
          ரயில் பயணிகளுக்கான 92 பைசா காப்பீடு திட்டத்தில் இதுவரை 28 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். இத்திட்டம் குறித்து
விளக்கும் வகையில் ஐஆர்சிடிசியில் பதிவு செய்துள்ள 4 கோடி பேருக்கு இ-மெயில் மூலம் தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

           இந்திய ரயில்வே துறை 17 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு தினமும் 14 ஆயிரத்துக்கும் மேற் பட்ட ரயில்கள் இயக்கப்படுகின் றன. இவற்றில் நாளொன்றுக்கு சுமார் 2.30 கோடி பேர் பயணம் செய்கின்றனர். கடந்த ரயில்வே பட்ஜெட்டில் பயணிகளுக்கான காப்பீடு திட்டம் கொண்டுவரப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, ஐஆர்சிடிசி இணைய தளம் மூலம் ஆன் லைனில் டிக்கெட் முன்பதிவு செய்தால் 92 காசு பிரீ மியம் செலுத்த வேண்டும். பின்னர் ரயிலில் பயணம் செய்யும்போது ஏதாவது விபத்து ஏற்பட்டு பயணி கள் மரணம் அடைந்தால் அவர் களின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். உடல் உறுப்புகளை இழந்தால் ரூ.7.5 லட்சம் கிடைக்கும். காயம் ஏற்பட்ட வர்களுக்கு மருத்துவச் செலவாக ரூ.2 லட்சம் வரையிலும் வழங்கப் படும். ஐசிஐசிஐ லோம்பார்ட், ராயல் சுந்தரம், ஸ்ரீராம் ஆகிய காப்பீட்டு நிறுவனங்களுடன் ஐஆர்சிடிசி-யும் இணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்துகிறது.
இந்த புதிய காப்பீடு திட்டம் கடந்த 1-ம் தேதி பிற்பகல் 2.45 மணிக்கு தொடங்கியது. இத்திட்டத் தில் இதுவரை 28 லட்சம் பேர் ஆத ரவு தெரிவித்து பதிவு செய்துள்ள னர். இத்திட்டத்தை பெரிய அளவில் மக்களிடம் கொண்டு சேர்க்க ஐஆர்சிடிசி திட்டமிட்டுள்ளது. அதற்காக தனது இணையதளத்தில் பதிவு செய்துள்ள 4 கோடி பேருக்கு அவர்களின் இ-மெயில் முகவரிக்கு இத்திட்டம் குறித்த முழு தகவல்களும் அனுப்பப் பட்டுள்ளன.
இது தொடர்பாக ‘தி இந்து’ விடம் ஐஆர்சிடிசி உயர் அதிகாரி கள் கூறியதாவது:
ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வோர் இந்த காப்பீடு திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம். 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள், வெளிநாட்டவர் தவிர மற்ற அனைவரும் பயனடைய முடியும். புறநகர் ரயில்களுக்கு இந்த காப்பீட்டுத் திட்டம் பொருந்தாது.
இணையதளம் மூலம் முன்பதிவு செய்பவர்கள் விருப்பப்பட்டால் கூடுதலாக 92 பைசா செலுத்தி இந்தக் காப்பீட்டை பெற்றுக் கொள்ளலாம். இத்திட்டத்தில் இது வரை 28 லட்சம் பேர் பதிவு செய் துள்ளனர். ஐஆர்சிடிசியில் மொத் தம் 4 கோடி பேர் உறுப்பினர்களாக பதிவு செய்துள்ளனர். இவற்றில் சராசரியாக தினமும் 5 லட்சம் முதல் 5.7 லட்சம் பேர் வரை டிக்கெட் முன்பதிவு செய்கின்றனர்.
ஏசி முன்பதிவு டிக்கெட்டுக்கு ரூ.40, ஏசி அல்லாத முன்பதிவு டிக் கெட்டுக்கு ரூ.20 சேவைக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதன்மூலம் மட்டுமே ஐஆர்சிடிசி-க்கு சுமார் ரூ.1.30 கோடி வருவாய் கிடைக்கிறது. ஒரு நிமிடத்தில் 7 ஆயிரம் டிக்கெட் முன்பதிவு செய்யும் வகையில் சர்வர் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது இணையதளம் வழியாக 60 சதவீதம் பேர் டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர். இந்த எண்ணிக்கை அதிகரிக்கும்போது, வருவாயும் அதிகரிக்கும்.
பயணிகளுக்கு முக்கியத்துவம் அளித்து உருவாக்கப்பட்டுள்ள 92 பைசா காப்பீடு திட்டம் குறித்த முழுமையான விளக்க குறிப் பேட்டை எங்களது இணையதளத் தில் பதிவு செய்துள்ள 4 கோடி பேருக்கும் அவர்களின் இ-மெயி லுக்கு அனுப்பியுள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

10th Std English One Mark Question Bank