மனிதனுக்கு 98 % நோய்கள் தவறான உணவுப் பழக்கங்களால் தான் வருகிறது: இயற்கை மருத்துவர்


          மனிதனுக்கு 98 சதம் நோய்கள் தவறான உணவுப்பழக்கங்களால்தான் வருகிறது என சென்னை இயற்கை மருத்துவர் யுவபாரத் கூறினார். 


           சிவகாசி சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பில் வியாழக்கிழமை இயற்கை மருத்துவம் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் அவர் கலந்து கொண்டு சிறப்புறையாற்றி மேலும் பேசியதாவது: நாகரீகம் என்ற பெயரில் நாம் பலவகையான உணவுகளை உண்டு வருகிறோம். மனித உடலில் கழிவுகள் தேங்கினால் அதில் கிருமிகள் உருவாகி நோய்தாக்கும்.நம் தவறான உணவுபழக்கங்களால்தான் 98 சதம் நோய்கள் வருகிறது.


உலகில் 22 ஆயிரம் வகையான நோய்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.உலகில் 84 லட்சம் வகையான ஜீவராசிகள் உள்ளது.ஆனால் மனிதனுக்கு மட்டுமே நோய் வருகிறது.மிருகங்கள் காட்டில் உள்ளஇலைதழைகளை அப்படியே உண்கிறது.மிருகங்கள் சமைத்த உணவுகளை உண்பதில்லை.எனவே அவைகளுக்கு நோய் வருவதில்லை.குறைந்த பட்சம் ஒரு நாளைக்கு ஒருவேளையாவது சமைக்காத இயற்கை உணவினை உண்ணவேண்டும்.

ஆடு, கோழிகள் இறந்த பின்னர் அவற்றில் எந்த சத்தும் இருப்பதில்லை.பாலுக்குப்பதில் தேங்காய்பால் சேர்த்துக்கொள்ளலாம்.வேர்கடலை, சோயா ஆகியவற்றில் புரோட்டின் உள்ளது.பாலீஸ் செய்யப்பட்ட அரிசியில் சத்துக்கிடையாது.சர்க்கரைக்குப்பதில் பணங்கற்கண்டு, கருப்பட்டி பயன்படுத்த வேண்டும்.சிறு சிறு மாற்றத்தை உணவு முறையில் கொண்டுவந்தால் நாம் நோயின்றி வாழலாம் என்றார்.

இதில் சங்க உதவிஆளுநர்கள் வேம்பார், மூர்த்திஉள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.செங்க செயலாளர் மாணிக்கராஜா நன்றி கூறினார்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)