ஆட்டிசம் குறைபாடு உள்ள குழந்தைகளை அடையாளம் காண உதவும் ஐ பாட் விளையாட்டு!
ஆட்டிசம் குறைபாடு உள்ள குழந்தைகளை அவர்களை ஐ பாட்டில் விளையாட்டுகளை விளையாடச் செய்வதன் மூலம் கண்டறிய முடியும் என ஒரு ஆய்வு முடிவு தெரிவிக்கிற
து.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ மாகாணாத்தில் உள்ளது ஸ்ட்ராத்க்ளைட் பல்கலைக்கழகம். இதன் குழந்தைகள் வளர்ப்பு மற்றும் முன்னேற்ற பிரிவின் மூத்த பேராசிரியர் ஜொனாதன் பட். இவர் போலந்து நாட்டைச் சேர்ந்த 'ஹரிமட்டா' எனும் நிறுவனத்துடன் சேர்ந்து இது தொடர்பான ஆய்வை மேற்கொண்டுள்ளார். இதன் முடிவுகள் லண்டனில் இருந்து வெளிவரும் 'சைன்டிபிக் ரிப்போர்ட்ஸ்' என்னும் இதழில் வெளியிடப்பட்டுள்ளன.
அதன் முடிவுகள் பற்றி தலைமை ஆய்வாளர் ஜோனாதன் பட் தெரிவித்துள்ளதாவது:
ஆட்டிசம் என்பது குழந்தை பருவத்தில் ஏற்படும் ஒரு நரம்பு மண்டல வளர்ச்சி தொடர்பான குறைபாடாகும். இதன் மூலம் குழந்தைகள் மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளுதல் மற்றும் உரையாடுவதில் பிரச்சினைகள் உண்டாகும்.
இதன் பாதிப்பை ஆரம்பத்திலேயே கண்டறிவதன் மூலம் பெற்றோருக்கும், குழந்தைகளுக்கும் இதை சரி செய்வதற்கான பல்வேறு சேவைகளை பெற வாய்ப்பு ஏற்படும்.
பின்னர் அவர்களை கையசைவுகளை ஆய்வு செய்த பொழுது, அவர்கள் டேப்லெட்டுகளை அதிக விசையுடன் பயன்படுத்துவதும், அவர்களின் கை நகர்த்தல் முறைகளில், ஒரு குறிப்பிட்ட முறையில் விசையின் பயன்பாடு இருப்பதையும் கண்டறிந்தனர்.
இதை ஒரு முக்கியமான கண்டுபிடிப்பு என்று கூறலாம்,. ஏனென்றால் இதன் மூலம் கடுமையான மற்றும் அதிக செலவு பிடிக்கும் சிகிச்சை முறைகளை நாட வேண்டிய அவசியம் இருக்காது.
ஆனால் இது தொடர்பாக இன்னும் பல ஆய்வுகளை செய்ய வேண்டி உள்ளது. மேலும் இதன் எல்லைகள் என்ன என்பது குறித்தும் விரிவான விளக்கங்கள் தேவைப்படுகிறது.
இவ்வாறு ஜோனாதன் தெரிவித்தார்.