வாட்ஸ் அப்: தனி உரிமை பாதுகாப்பு-உயர் நீதிமன்றம் உத்தரவு!
வாட்ஸ் அப் ஃபேஸ்புக்குடன் இணைந்த பிறகு, வாட்ஸ் அப்பை பயன்படுத்துபவர்களின் தகவல்கள், ஃபேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ளலாம். பகிர்ந்துகொள்ள விரும்பாதவர்கள் வெளியேற செப்டம்பர் 25ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்ப
ட்டது. புதிய தனிநபர் கொள்கையை எதிர்த்து
டெல்லி உயர்நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர்கள் கர்மன்யா சிங் சரீன், ஷ்ரேயா சேதி ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு, டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஜி.ரோகினி மற்றும் நீதிபதி சங்கீதா திங்ரா தலைமையிலான அமர்வுமுன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வாட்ஸ் அப் தரப்பில் மூத்த வழக்கறிஞர் சித்தார்த்த லுத்ரா, ‘வாட்ஸ் அப் பயன்படுத்துபவர்கள் அவர்களுடைய கணக்கை நீக்கிவிட்டாலோ அல்லது வாட்ஸ் அப்பில் இருந்து வெளியேறிவிட்டாலோ அவர்களைப் பற்றிய எந்தத் தகவலும் சர்வரில் இருக்காது. பதிவு செய்த தகவல் அதன் உரிமையாளருக்குச் சென்று சேராவிட்டாலும் சர்வரில் இருந்து அழிக்கப்பட்டுவிடும். புதிய என்கிரிப்ஷன் முறையால் 3ஆம் நபர் யாரும் இந்த தகவல்களைப் பார்க்க முடியாது’’ எனக் கூறினார். இரு தரப்பு வாதத்தைக் கேட்ட நீதிபதிகள் வழக்கை ஒத்திவைப்பதாகக் கூறினர்.