ரிலையன்ஸ் ஜியோ சேவையில் "டேட்டா" அல்லது"வாய்ஸ் கால்" இரண்டில் ஒன்றிற்கு மட்டும் கட்டணம்

ரிலையன்ஸ் ஜியோ சேவையில் "டேட்டா" அல்லது"வாய்ஸ் கால்" இரண்டில் ஒன்றிற்கு மட்டும் கட்டணம் செலுத்தும் புதிய முறை அறிமுகம்

          ரிலையன்ஸ் ஜியோ சேவை இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  இந்தியாவில் செல்லிடப்பேசி மூலம் இணைய சேவை பெறும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கடந்த மார்ச் 31ஆம் தேதிநிலவரப்படி சுமார் 32 கோடி. இந்தியாவில் இந்த மொபைல் இன்டர்நெட் சேவையை மொத்தம் 138 நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.

        அதில் பார்தி ஏர்டெல் 9.5 கோடி வாடிக்கையாளர்களுடன் முதலிடத்தில் உள்ளது. வோடஃபோன் நிறுவனம் 6.7 கோடி, ஐடியா நிறுவனம் 4.4 கோடி, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் 3.9 கோடி, பி.எஸ்.என்.எல். 3.4 கோடி, ஏர்செல் 2.2 கோடி, டாடா 2.1 கோடி, டெலிநார் 1.3 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளன. எம்டிஎஸ், எம்டிஎன்எல்,விடியோகான் ஆகிய நிறுவனங்கள் கிட்டத்தட்ட 20 லட்சம் வரையிலான வாடிக்கையாளர்களையும், பிற நிறுவனங்கள் 10 லட்சத்துக்கும் குறைவான வாடிக்கையாளர்களையும் கொண்டுள்ளன.

இவற்றில் ஏர்டெல், வோடஃபோன், ஐடியா ஆகிய நிறுவனங்கள் 4ஜிசேவையை வழங்கி வரும் நிலையில், முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் நிறுவனத்தின் சார்பில் 4ஜி சேவையை வழங்குவதற்காக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் களத்தில் குதித்துள்ளது."டேட்டா" அல்லது "வாய்ஸ் கால்" இரண்டில் ஒன்றிற்கு மட்டும் கட்டணம் செலுத்தும் புதிய முறையை ரிலையன்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்துவதாக முகேஷ் அம்பானி மும்பையில் அறிவித்தார்.

அப்போது அவர் கூறுகையில்:- தற்போது வாழ்க்கை டிஜிட்டல் மயமாக மாறிக்கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு கால கட்டத்தில் இந்தியாவும், இந்தியர்களும் டிஜிட்டல் பயன்பாட்டில் பின்தங்கிவிடக்கூடாது. இந்தியாவின் டிஜிட்டல் தரவரிசையை உயர்த்தும் வகையில் ரிலையன்ஸ் ஜியோ அறிமுகமாகியுள்ளது. இன்றைக்கு மொபைல் இண்டர்நெட் என்பது உயிர்மூச்சாக மாறிவிட்டது. ஜியோ என்பது வர்த்தகத்தை தாண்டிய ஒன்றாகும். ஒவ்வொரு இந்தியரின் வாழ்க்கையையும் மேம்படுத்துவதை எங்களது இலக்காக கொண்டுள்ளோம்.தற்போது ரிலையன்ஸில் ஒரு நிமிடத்திற்கு கால் கட்டணம் 65 காசுகள் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது முற்றிலும் இலவசமாக்கப்படும் என்றும், அதற்கு பதிலாக 1GB-4G டேட்டா -விற்கு ரூ.50 என்ற வீதத்தில் கட்டணம் செலுத்தினால் போதுமானதாகும். இது உலகிலேயே மிகக் குறைந்த டேட்டா கட்டணம் என்று கூறியுள்ளார்.

ரிலையன்ஸ் ஜியோ  கட்டண விவரம்:-ரூ.149, ரூ.499, ரூ.999, ரூ.1,499, ரூ.2,499, ரூ.3,999 மற்றும் ரூ.4,999 என விலைகளின் அடிப்படையில் 7 திட்டங்களை ஜியோ அறிமுகப்படுத்துகிறது.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)