பள்ளி தேர்வுகள் ஆதார் திட்டத்துடன் இணைப்பு
பீஹாரில் மாநில தேர்வில் நடந்த முறைகேட்டை அடுத்து, தேர்வு எழுதும் மாணவர்கள் தங்களின் ஆதார் எண்களை தேர்வுக்கான படிவத்தில் குறிப்பிட வேண்டும் என்ற நடைமுறை
யை அம்மாநில அரசு கொண்டு வந்துள்ளது.
இதனால் போலிகள் தவிர்க்கப்படுவதுடன், அவர்களை பற்றிய விபரங்களையும் எளிதில் கையாளலாம்.
பீஹாரில் இந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் நடக்கும் பள்ளி தேர்வுகளிலேயே இந்த நடைமுறையை அமல்படுத்த பீஹார் பள்ளி தேர்வுத்துறை கழகம் திட்டமிட்டுள்ளது. தேர்வுகளை ஆதார் திட்டத்துடன் இணைத்த முதல் மாநிலம் பீஹார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆதார் எண் வைத்திருக்கும் மாணவர்கள் தேர்வுக்கான படிவத்தில் அதை குறிப்பிட வேண்டும். ஆதார் எண் இல்லாத மாணவர்கள் அதற்காக விண்ணப்பித்து பெற்று, அதனை குறிப்பிட வேண்டும் என பள்ளி தேர்வு கழக தலைவர் ஆனந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.