வீணாக இனி ரேஷன் கடைக்கு அலையவேண்டாம் !

இதை உங்களுக்கு தெரிஞ்சவங்க மற்றும் படிக்கதேரியாதவங்களுக்கு சொல்லி கொடுங்க நண்பர்களே !!....
ரேஷன் கடைக்கு செல்வோரில் பல பேருக்கு இந்த அனுபவம் கிடைத்தி...ருக்கும். காலையில் அரிசி, பருப்பு,
சர்க்கரை போன்றவைவந்திருக்கும். நாம் மாலையிலோ அல்லது மறுநாளோ சென்றால், அவைகள்இருந்தும் கூட "ஸ்டாக் இல்லை" என்று சொல்லி விடுவார்கள்.
இனி அப்படி ஏமாற்ற முடியாது. ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பினாலே போதும், அன்றைய சரக்கிருப்பு விவரங்களைப் அறிந்துக் கொள்ளலாம்.
எஸ்.எம்.எஸ் அனுப்பும் முறை:
குடும்ப அட்டைதாரர்கள் (PDS) இடைவெளி (மாவட்ட குறியீடு) இடைவெளி (கடை எண்)
என்ற முறையில் எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும்.
உதாரணமாக :-
PDS 01 BE014
என்ற தகவலை 9789006492, 9789005450, 9176480226, 9176480227, 9094831766, 9790725349, 9176480216ஆகிய ஏதேனும் ஒரு செல்பேசி எண்ணுக்கு அனுப்பினால் உடன் ரேஷன் கடையில் பொருள் வாரியான அன்றைய சரக்கிருப்பு விவரங்களைப் பெறலாம்.
மேலே கண்ட எஸ்.எம்.எஸ். தகவலில் உள்ள 01 என்ற குறியீடு சென்னை (வடக்கு) மாவட்டத்திற்கு உரியது. எனவே, இந்த குறியீட்டினை தங்களதுமாவட்டக் குறியீட்டினைக் கொண்டுமாற்றிட வேண்டும்.
அதுபோல் BE014 என்ற கடை குறியீடு (shop code) தங்களது குடும்ப அட்டையிலுள்ள முன்பக்க கீழ்ப்பகுதியில்அச்சடிக்கப்பட்டுள்ளவாறு எஸ்.எம்.எஸ். பதிவு செய்ய வேண்டும்.
குடும்ப அட்டை எண்ணில் முதல் இரண்டு எழுத்துக்கள் மாவட்ட குறியீட்டு எண்ணாகும். உதாரணமாக, 01/G/0557070 என்ற குடும்ப அட்டை எண்ணில் “01” என்பது சென்னை (வடக்கு) மாவட்ட குறியீடாகும். இதுபோல் ஒவ்வொரு மாவட்ட குறியீடு குடும்ப அட்டை எண்ணில் உள்ளது. எனவே, அந்த குறியீட்டு எண்ணை சரியாக அளித்து நியாய விலைக் கடையின் இருப்பு விவரத்தைப் பெறலாம்.
எஸ்.எம்.எஸ். அனுப்பும் கணினியில்(server) மாலை 5 மணிக்கு மேல் அதிகபளு ஏற்படுவதால் மேற்கண்ட தகவல் பெறும் சேவையை காலை நேரங்களில் உடனடியாக பதில் தகவல்j பெறும் வண்ணம் பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
அவசியம் நண்பர்களுக்கு பகிரவும்

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)